aamir khan Twitter
சினிமா

Aamir Khan : "வாழ்க்கையை வேறு விதமாக அனுபவிக்க போகிறேன்" - சினிமாவுக்கு லீவு விட்ட நடிகர்

Antony Ajay R

பாலிவுட் நடிகர் ஆமிர் கான் தனது சினிமா கரியரில் இருந்து ஓய்வு எடுக்கப்போவதாக கூறியிருக்கிறார்.

கடைசியாக லால் சிங் சத்தா படத்தை முடித்த ஆமிர் கான் அதன் பிறகு சாம்பியன்ஸ் என்ற படத்தில் நடிக்க இருந்தது. ஆனால் இப்போது அந்த படத்தை அவர் தயாரிக்க மட்டுமே போவதாக தெரிவித்துள்ளார். ஆமிர் கானின் இந்த முடிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியானதாக இருக்கிறது. எனினும் இந்த ஓய்விற்கான காரணங்களை ஊடக சந்திப்பில் விளக்கியுள்ளார்.

"சாம்பியன்ஸ் ஒரு அருமையான கதை, மனதுக்கு இதமாக எழுதப்பட்டிருந்தது. இனிமையான படம். ஆனால் நான் அதில் நடிக்கவில்லை. எனக்கு இப்போது இடைவெளித் தேவை என நினைக்கிறேன். என் அம்மாவுடனும் என் குழந்தைகளுடனும் நான் நேரம் செலவிட வேண்டும்" என ஆமிர் கான் தெரிவித்திருக்கிறார்.

தன்னுடைய 35 ஆண்டு கால சினிமா வாழ்வில் இதுவே அவர் முதன் முதலாக இடைவெளி எடுப்பது என்றும் அவர் கூறியுள்ளார்.

"கடந்த 35 ஆண்டுகளாக நான் வேலை செய்து வருகிறேன். என் பணியில் ஒருமனதாக செயலாற்றுகிறேன். ஆனால், எனக்கு நெருக்கமானவர்களுக்கு இது நியாயமில்லை எனத் தோன்றுகிறது. இப்போது அவர்களுடன் செலவிட எனக்கு இந்த ஓய்வு அவசியமாகிறது. வாழ்க்கையை வேறுவிதமாக அனுபவிக்கப் போகிறேன். அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு நான் எந்த படத்திலும் நடிக்கப் போவதில்லை" என்றிருக்கிறார் ஆமிர் கான்.

கடைசியாக ஆமிர்கான் நடித்த லால் சிங் சத்தா திரைப்படம் சரியான வசூலைப் பெறவில்லை. பாலிவுட்டின் boycott ட்ரெண்டில் சிக்கிய படங்களில் இதுவும் ஒன்று.

அதைத் தொடர்ந்து கஜோல் நடிக்கும் சலாம் வெங்கி படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார் ஆமிர்கான். இந்த படம் டிசம்பர் 9ம் தேதி வெளியாகயிருக்கிறது.

ஒன்றரை ஆண்டுகள் கழித்து ஆமிர் கான் கம் பேக் கொடுக்கும் வரை ரசிகர்கள் காத்திருக்கவேண்டியது தான்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?