சிவக்குமார் கல்வி அறக்கட்டளை மற்றும் அகரம் இணைந்து மாணவர்களுக்கு விருது வழங்கும் விழாவை நடத்தினர். இந்த விழாவில் நடிகர் சிவக்குமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
கடந்த மாதம் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நடிகர் விஜய் ஊக்கத் தொகை வழங்கியதும், ஜூலை 15ம் தேதி தளபதி பயிலரங்கத்தை தொடங்கியதும் குறிப்பிடத்தக்கது.
விஜயின் செயல்கள் குறித்து நடிகர் கார்த்தி கருத்து தெரிவித்துள்ளார். முன்னதாக விழாவில் பேசிய அவர், "கல்வி முக்கியத்துவம் வாய்ந்த காலக்கட்டமாக தற்போது உள்ளது. 70 ஆண்டுகளுக்கு முன்னர் அவ்வாறு இல்லை. அப்போது கணக்கு போட கூட மணல் மீது தான் எழுத வேண்டும். மேலும், நீண்ட தூரத்தில் உள்ள பள்ளியில் ஓர் ஆசிரியர் தான் இருப்பார்.
அப்படியே பத்தாம் வகுப்பு படித்தால் படிப்பவர்களின் எண்ணிக்கை குறையும். ஒரு பையன் படித்தால் அந்த குடும்பம் மட்டுமல்ல, அந்த தலைமுறையே பயன்பெறும். அப்படிப்பட்ட குடும்பம் தான் எங்களது குடும்பம்." எனப் பேசினார்.
மேலும், "மலை மீது இருந்து கீழே இறங்கி வந்து படிக்கும் குழந்தைகள் உள்ளன. இது எவ்வளவு பெரிய சாதனையாகும். அவர்கள் மட்டுமல்லாமல் இலங்கை தமிழர்கள் குழந்தைகளும் படிக்கின்றனர். இப்போது கவனத்தை சிதறவிட அதிகம் உள்ளது. அதற்கு முக்கியதுவம் கொடுக்க கூடாது. கல்வியின் முக்கியத்துவத்தை அடிக்கடி சொல்ல வேண்டும்." என்றும் பேசினார்.
விழாவுக்கு பிறகு பத்திரிகையாளர்கள் கேள்விக்கு பதிலளித்தவர், "நிறைய செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது. இது எதுவும் பத்தவில்லை என்று தோன்றுகிறது. ஏனெனில், அகரம் பவுண்டேஷனுக்கு 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வருகிறது. அதில் 500, 600 விண்ணப்பங்களை மட்டுமே நிவர்த்தி செய்யப்பட முடிகிறது.
இன்னும் 4,000 பேர், 5,000 பேர் தகுதியானவர்கள். அவர்களுக்கு உதவிதொகை கொடுக்கமுடியாமல் போகிறது என்ற வருத்தம்தான் அதிகம் உள்ளது. எளிய பின்புலத்தில் இருந்து வந்து சாதனை படைக்கும் மாணவர்களை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது. மிகப்பெரிய சாதனையாக பார்க்க முடிவது மகிழ்ச்சி அளிக்கிறது"
நடிகர் விஜய் குறித்து, "நடிகர் விஜய் பயிலரங்கம் தொடங்கி இருப்பது மிகவும் சந்தோஷம். இதுவும் பத்தாது; ஏனென்றால் அவ்வளவு தேவை இங்கு உள்ளது. விஜய் அண்ணா செய்வது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது" எனப் பேசினார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust