simbu Newssense
சினிமா

மதுபான விளம்பரத்தில் நடிக்க மறுத்த சிம்பு - இதுதான் காரணம்

Keerthanaa R


பிரபல மதுபான நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிக்க நடிகர் சிலம்பரசன் மறுத்துள்ளார்.

பெரு நிறுவனங்கள் தங்கள் பிராண்டுகளின் விளம்பரத்திற்கு முன்னணி நடிகர்களை பயன்படுத்துவது புதிதான விஷயமல்ல. இதற்காக அந்நிறுவனங்கள் நடிகர்களுக்கு கோடி கணக்கில் சம்பளம் தர தயாராகவும் இருக்கும். முன்பெல்லாம் பல முன்னணி நடிகர்கள் எல்லா விதமான விளம்பரங்களிலும் நடித்துவந்தனர்.

ஆனால் காலப்போக்கில் பலரும், தாங்கள் நடிக்கும் விளம்பரங்கள் தங்களது சொந்த வாழ்க்கைக்கு ஒவ்வாமல் இருந்தால் நடிக்க மறுத்துவந்தனர்.

மேலும் அவர்களது செயல்கள் ஏதாவது ஒரு விதத்தில் ரசிகர்கள் வாழ்க்கையில் முக்கியப் பங்காற்றுவதால், அவர்களுக்கு நல்ல உதாரணத்தைக் கொடுக்கவிரும்புவதாகக் கூறியதும் அடங்கும்.

அந்த வரிசையில் நடிகர் சிம்புவும் மதுபான விளம்பரத்தில் நடிக்க மறுத்துள்ளார். கடந்த வருடம் மதுபானம் அருந்துவதை நிறுத்திவிட்டதாக சிம்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது ஆல்கஹால் விளம்பர ஆஃபர் ஒன்றை மறுத்துள்ளார். தான் நடிக்கும் விளம்பரங்கள் குறித்து சிம்பு அதித கவனம் செலுத்தி வருவதாக கூறிய வட்டாரங்கள், தனது ரசிகர்களுக்கு தவறான உதாரணமாக தான் இருக்கவிரும்பவில்லை என்பதால் இதை மறுத்ததாக கூறினர். சிம்பு அவர் நடிக்கும் விளம்பரங்கள் தன்னை பற்றிய பிம்பத்தை மக்கள் மனதில் விதைக்கும் என்பதால் மிக கவனமாக இருக்கிறாராம். பல கோடி ரூபாய் சம்பளமாக தருவதாக கூறியபோதும் அவர் ஒத்துக்கொள்ளவில்லை.

Allu Arjun

சமீபத்தில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் விஸ்கி விளம்பரம் ஒன்றில் நடிக்க மறுத்தது குறிப்பிடத்தக்கது.

சிம்பு கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது. இதன் இரண்டாவது பாடல் இன்று மாலை வெளியாகும் என படக்குழு தரப்பில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?