vishal Twitter
சினிமா

லத்தி படப்பிடிப்பில் மீண்டும் நடிகர் விஷாலுக்குக் காயம் - என்ன நடந்தது?

Priyadharshini R

ராணா புரொடக்ஷன்ஸ் சார்பில் நடிகர் ரமணா, நந்தா இணைந்து தயாரித்து வரும் படம் 'லத்தி'. இதன் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் போன்ற நகரங்களில் கடந்த சில மாதங்களாக நடைபெற்றது. இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் இரவு பகலாக நடந்து வருகிறது.

ஏற்கனவே, இப்படத்தில் இடம் பெறும் இறுதிக்கட்ட 20- நிமிட காட்சிக்காக ஹைதராபாத்தில் 30- நாட்கள், ஸ்டண்ட் காட்சி பீட்டர் ஹெய்ன் ஸ்டண்ட் அமைப்பில் , புது இயக்குநர் வினோத்குமார் டைரக்‌ஷனில் பிரமாண்டமாகப் படமாக்கப்பட்டது.

Laththi

பாழடைந்த பில்டிங்கில் ஷூட்டிங் நடந்தபோது நடிகர் விஷாலுக்குக் கையில் விபத்து ஏற்பட்டு, சில நாட்கள் படப்பிடிப்பு ரத்தானது. பிறகு கேரளாவுக்குச் சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டு மீண்டும் ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து முடித்தார்.

படத்தில் மீண்டும் ஒரு ஸ்டண்ட் காட்சியின் படப்பிடிப்பு சென்னையில் இப்பொழுது இரவு பகலாக நடைபெற்று வருகிறது. இன்னும் சில நாட்களில் படப்பிடிப்பு முடிவடைந்து விடும் நிலையில் இருக்கிறது

vishal

இந்த படத்திற்காக எடுக்கப்பட்ட ஒரு காட்சியில், ஒரே சமயத்தில் 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் விஷாலை சுற்றிக்கொண்டு கை, கால், உடம்பில் தாக்க, எதிர்பாராத விதமாகக் காலில் நிஜமாகவே அடி விழுந்ததில், துடிதுடித்து கீழே விழுந்தார்.

இதனால், எழுந்து நிற்க முடியாமல் வலியால் அவதிப்பட்ட விஷாலுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் உடனடியாக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. மருத்துவமனைக்குச் அழைத்து செல்லப்பட்டு விஷாலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. காலில் எலும்பு முறிவு எதுவும் இல்லை என்று கூறிய மருத்துவர்கள், அவருக்கு பிசியோ சிகிச்சை அளித்தனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?