yash Twitter
சினிமா

KGF Rocky Bhai : தேடி வந்த பல கோடி மதிப்பிலான வாய்ப்பை மறுத்த நடிகர் - ஏன்?

பல கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு பான் மசாலா விளம்பரத்தில் நடிக்கத் தன்னை தேடி வந்த வாய்ப்பை தனது ரசிகர்களின் நலனைக் கருத்தில் கொண்டு மறுத்துவிட்டார் கேஜிஎஃப் புகழ் நடிகர் யஷ்.

Keerthanaa R

நான்கு வருடங்களுக்கு முன்பு வெளிவந்த கன்னட படமான கேஜிஎஃப் முதல் பாகம், அதில் நடித்தவர்கள், வேலைப் பார்த்தவர்கள் மட்டுமல்லாது, கன்னட திரையுலகத்தையே உலகளவில் பேச செய்தது. கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்ற கேள்வியையும் தாண்டி, கருடனைக் கொன்ற பின் கேஜிஎஃபில் என்ன நடந்தது என்ற கேள்வி பலரது தூக்கத்தைக் கெடுத்திருந்தது.

கடந்த மாதம் வெளியாகி பலரையும் திரையரங்கத்துக்கு இழுத்து, பாக்ஸ் ஆபீஸில் 100 கோடி வசூலை எட்டி சாதனை புரிந்துக் கொண்டிருக்கிறது கேஜிஎஃப் 2.

yash

கேஜிஃப் முதல் பாகம், கதாநாயகன் யஷ்ஷை இந்திய அளவில் புகழடையச் செய்தது.

இவரது நேர்காணல்களில் இவர் அளித்த பதில்கள், தனி மனிதனாகவும் இவரை நேசிக்க வைத்தது. இப்போது தவிர்க்க முடியாத நட்சத்திரமாக மாறிய இவரை தேடி வந்த பல கோடி மதிப்பிலான பான் மசாலா விளம்பரத்தில், நடிக்க மறுத்துள்ளார்.இது மீண்டும் ரசிகர்கள் மத்தியில் மதிப்பைக் கூட்டியிருக்கிறது.

இந்த செய்தியை நடிகர் யஷ்ஷின் விளம்பர வாய்ப்புகளை நிர்வகிக்கும் அர்ஜுன் பானர்ஜி வெளியிட்டார்.

அவர் கூறுகையில், "அண்மையில் பல கோடி மதிப்பிலான பான் மசாலா விளம்பரத்தில் நடிக்க கேட்டபோது, யஷ் அதை மறுத்துவிட்டார். ரசிகர்களுக்குச் சரியான கருத்துகளை மட்டுமே எடுத்துச் செல்லவேண்டும் என்பதில் அவர் உறுதியாகவுள்ளார்.

மேலும், ரசிகர்களைத் தவறாக வழிநடத்திட விரும்பவில்லை என்றும், எல்லோருக்கும் ஆரோக்கியம் மிக அவசியமென்றும் அவர் தெரிவித்தார்."

Akshay Kumar

பான் மசாலா விளம்பரத்தில் நடித்ததற்காக இந்தி நடிகர் அக்ஷய்குமார் மன்னிப்பு கேட்டதும், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்க மறுத்ததும் குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn: https://www.newssensetn.com/

Nalam360 : https://www.newssensetn.com/health

Newsnow: https://www.newssensetn.com/wow-news

Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?