கன்னட திரையுலகின் முக்கிய ஸ்டாராக வலம் வரும் யாஷ், தனக்கென மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை கொண்டவர்.
குறிப்பாக இவரது நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப் முதல் பாகம், கன்னட திரையுலகை மட்டுமல்லாது தென்னிந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தது. இந்த படம் அனைத்து வகையான ரசிகர்களையும் கவர்ந்த ஒரு படைப்பாக இருந்தது.
இந்நிலையில் கே.ஜி.எஃப் படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் நடிகர் யாஷ் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
ரங்க நாயக்கர் மண்டபத்தில் தேவஸ்தானம் சார்பில் அவருக்கு தீர்த்தம் மற்றும் லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. கோவிலுக்கு வெளியே அவரது ரசிகர்கள் அவரை சூழ்ந்து செல்ஃபி எடுத்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த யாஷ், கடந்த முறை வந்த போது ஏழுமலையானை தரிசனம் செய்ய முடியவில்லை என்றும், தற்போது கே.ஜி.எஃப் 2 வெளியாவதற்கு முன்பாக திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தது மகிழ்ச்சி அளித்ததாகவும் கூறினார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.