Rachitha Mahalakshmi : ”ஆபாச மிரட்டல்” கணவர் மீது புகார் கொடுத்த ரச்சிதா - நடந்தது என்ன? Twitter
சினிமா

Rachitha Mahalakshmi : ”ஆபாச மிரட்டல்” கணவர் மீது புகார் கொடுத்த ரச்சிதா - நடந்தது என்ன?

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தினேஷ் தன்னுடைய செல்போனுக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்புகிறார் என்றும் மிரட்டல் விடுகிறார் என்றும் நடிகை ரச்சிதா சென்னை மாங்காடு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

Priyadharshini R

பிரிந்து வாழும் தன்னை மிரட்டுவதாக சின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி கணவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ‘பிரிவோம் சந்திப்போம்’ தொடரில் நடித்து பிரபலமான ஜோடி ரச்சிதா - தினேஷ்.

அந்தத் தொடரில் நடித்த இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

அதன் பின்னரும் சின்னத்திரையில் பிசியாக நடித்து கொண்டிருந்தார் ரச்சிதா. இதற்கிடையில் ரச்சிதா - தினேஷ் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு தனித்தனியாக வசித்து வந்தனர்.

தினேஷ் சீரியல்களில் நடிக்க, விஜய் டிவியில் இருந்து ரச்சிதாவிற்கு பிக்பாஸ் அழைப்பு வர அவர் அங்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தினேஷ் தன்னுடைய செல்போனுக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்புகிறார் என்றும் மிரட்டல் விடுகிறார் என்றும் நடிகை ரச்சிதா சென்னை மாங்காடு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

இந்தப்புகாரின் பேரில் தினேஷ் - ரச்சிதாவிடம் போலீஸார் விசாரணை நடத்தியிருக்கின்றனர். இவர்களுக்கு இடையிலான பிரச்சினைக்கு டப்பிங் ஆர்டிஸ்ட்டான ஜிஜியின் தலையீடுதான் காரணம் என்று சின்னத்திரை வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.

முன்னதாக ஜிஜி, தினேஷ் தன்னை தேவையில்லாமல் தொந்தரவு செய்வதாகக்கூறி காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?