காதலர்களுடன் ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் சுஸானே Twitter
சினிமா

காதலருடன் கை பிடித்து வந்த ஹ்ரித்திக் ரோஷன், புதிய காதலரை அறிவித்த முன்னாள் மனைவி

NewsSense Editorial Team

நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் தனது மனைவி சுஸானேயை விவாகரத்து செய்துவிட்டு தனியாக வசித்து வருகிறார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. சமீபத்தில் ஹ்ரித்திக் ரோஷன் பாடகி சபா ஆசாத் என்பவருடன் அடிக்கடி வெளி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அதோடு இருவரும் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் ஒருவரது பக்கத்தில் ஒருவரை ஒருவர் புகழ்ந்து எழுதுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இந்நிலையில் புதிதாக மும்பை விமான நிலையத்தில் ஹ்ரித்திக் ரோஷன் சபா ஆசாத் கையை பிடித்துக்கொண்டு வெளியில் வந்தார். இதனை அனைவரும் புகைப்படம் எடுத்தனர். அதனைப்பற்றி இருவரும் கவலைப்படவில்லை. இருவரும் மிகவும் மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டு கையை பிடித்துக்கொண்டு விமான நிலையத்திலிருந்து வெளியில் வந்தனர். இதன் மூலம் ஹ்ரித்திக் ரோஷன் சபா ஆசாத்துடனான தனது உறவை வெளியுலகிற்கு அறிவித்து இருப்பதாகக் கருதப்படுகிறது.

ஹ்ரித்திக் ரோஷன் இது போன்று நடந்து கொண்டதும் அவரது முன்னாள் மனைவி சுஸானே தானும் இதில் குறைந்தவர் இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக அவரது காதலருடன் விமான நிலையத்தில் கையை பிடித்துக்கொண்டு வெளியில் வந்தார். சுஸானே சமீப காலமாக டிவி நடிகர் அர்ஸ்லான் கொனி என்பவரை காதலிப்பதாகச் செய்தி வெளியானது. ஆனால் இருவரும் முறைப்படி வெளியில் தங்களது காதலைச் சொல்லிக்கொண்டது கிடையாது. அதோடு இருவரும் சேர்ந்து எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டதும் கிடையாது. ஆனால் இப்போது ஹ்ரித்திக் ரோஷன் விமான நிலையத்தில் தனது காதலியின் கையை பிடித்துக்கொண்டு வெளியில் வந்ததைப் பார்த்தவுடன் சுஸானேயும் தனது காதலை வெளியுலகிற்கு அறிவிக்கும் விதமாகக் காதலன் கையை பிடித்துக்கொண்டு விமான நிலையத்திலிருந்து வெளியில் வந்தார். ஏற்கனவே ஹ்ரித்திக் ரோஷன் நடிகை கங்கனா ரணாவத்தை காதலித்து வந்தார். இருவரும் பிரிந்த போது கடுமையாக மோதிக்கொண்டனர். இருவரும் காவல் நிலையம் வரை சென்றனர்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?