”Ajith என்னை ஏமாற்றிவிட்டார்” நடிகர் மீது தயாரிப்பாளர் மோசடி குற்றச்சாட்டு! என்ன நடந்தது? ட்விட்டர்
சினிமா

”Ajith என்னை ஏமாற்றிவிட்டார்” நடிகர் மீது தயாரிப்பாளர் மோசடி குற்றச்சாட்டு! என்ன நடந்தது?

Keerthanaa R

தன்னிடம் பணம் வாங்கிவிட்டு திருப்பி தராமல் தன்னை ஏமாற்றிவிட்டதாக நடிகர் அஜித்குமார் மீது பரபரப்பு குற்றச்சாட்டை வைத்திருக்கிறார் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன்

பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன். இவர் கமல் ஹாசன் நடித்த வேட்டையாடு விளையாடு, பார்த்திபனின் வித்தகன், வடிவேலு நடித்த இந்திரலோகத்தில் நா.அழகப்பன் உள்ளிட்ட படங்களை தயாரித்தவர்.

இவர் நடிகர் அஜித் குமார் தன்னை ஏமாற்றிவிட்டதாக குற்றம்சாட்டியிருக்கிறார்.

Ajith Kumar

நடிகர் அஜித் தன்னிடம் அவரது சொந்த விஷயம் ஒன்றிற்காக கடனாக பணம் பெற்றதாகவும், அந்த பணத்தை படம் நடித்துக்கொடுத்து ஈடு செய்வதாகவும் வாக்களித்து, பின்னர் ஏமாற்றியதாக கூறியிருக்கிறார்.

”நடிகர் அஜித் சில ஆண்டுகளுக்கு முன் தனது பெற்றோரை மலேசியாவுக்கு சுற்றிலா அனுப்பிவைக்க கடனாக பணம் வாங்கினார். என்னுடைய தயாரிப்பில் ஒரு படம் நடிப்பதாகவும், திருப்பித் தரவேண்டிய பணத்தை சம்பளத்தில் கழித்துக்கொள்ளுங்கள் என்றார்.

ஆனால் இப்போது வரை எந்த படத்திற்கும் என்னிடம் ஒப்பந்தமும் செய்யவில்லை, எனது பணத்தையும் திரும்ப தரவில்லை. இந்த மனிதர் தன்னை ஜெண்டில்மேன் என்று கூறிக்கொள்கிறார்” என்று தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் இந்தியா டுடே தளத்திடம் கூறியதாக நியூஸ் 18 தளத்தின் அறிக்கை கூறியுள்ளது

Ajith - shalini

மேலும் அஜித் நல்ல குடும்பத்தை சேர்ந்தவர், ஒரு படத்திற்கு குறைந்தது 50 கோடி ரூபாய் சம்பளம் வாங்குபவர். இவர் ஏன் தன்னை இப்படி ஏமாற்ற வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார் தயாரிப்பாளர்.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து நடிகர் அஜித் குமாரின் தரப்பில் இன்னும் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

சில தினங்களுக்கு முன், ஜவான் படம் தமிழில் வெளியான பேரரசு படத்தின் காப்பி எனக் கூறி தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?