Allu Arjun Pushpa
சினிமா

Pushpa 2 Update : அல்லு - ஃபகத் ஆக்‌ஷன் காட்சிகள், சமந்தாவின் கேமியோ - படபிடிப்பு எப்போது?

Antony Ajay R

கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி இந்திய அளவில் வெற்றி
பெற்ற திரைப்படம் புஷ்பா. அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா இதில் நடித்திருந்தனர். 2021ம் ஆண்டின் சிறந்த ஆக்‌ஷன் மற்றும் பொழுதுபோக்கு படமாக புஷ்பா தி ரைஸ் கொண்டாடப்பட்டது. இந்த படத்தின் இரண்டாவது பாகமான புஷ்மா தி ரூல் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்குவதாகத் தகவல்கள் வந்துள்ளன.

புஷ்பா படத்தின் நாயகன் அல்லு அர்ஜுன் இந்த கோடைகாலத்தை குடும்பத்துடன் செலவிட சில பயணங்களுக்குத் திட்டமிட்டிருப்பதால் ஜூன் இறுதி அல்லது ஜூலை தொடக்கத்தில் படபிடிப்பு தொடங்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே புஷ்பா 2வின் கதை மற்றும் லொகேஷனில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Pushpa

கதை வேலைகள் முடிந்துவிட்டாலும் இயக்குநர் சுகுமார் வசனங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறாராம். 2023ன் ட்ரெண்ட் செட்டர் டயலாக்ஸாகா புஷ்பா பட வசனங்கள் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம். தளபதி 66 படத்தில் இணைந்துள்ள ராஷ்மிகா மந்தனா டேட்ஸ் அட்ஜஸ் செய்து புஷ்பா 2ம் பாகத்தில் நடிக்கிறார். முதல் ஷெடூலில் முக்கிய காட்சிகள் அனைத்தையும் கவர் செய்யத் திட்டமிட்டு வருகின்றது படக்குழு.

புஷ்பா இரண்டாம் பாகத்திலும் சமந்தா கேமியோவை எதிர்ப்பாக்கலாம் எனவும் தகவல்கள் வருகின்றன ஆனால் அவை இன்னும் உறுதியாகக் கூறப்படவில்லை. வில்லனாக முதல் பாகத்திலேயே அறிமுகமான ஃபகத் ஃபாசில் மற்றும் அல்லு அர்ஜுன் இடையில் ஆக்‌ஷன் காட்சிகள் எதிர்ப்பாக்கலாம் எனவும் படக்குழுவினர் கூறுகின்றனர்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?