Anushka Shetty Twitter
சினிமா

Anushka Shetty: "எனக்கு அரிய வகை நோய் இருக்கிறது” மனம் திறந்த நடிகை - என்ன பிரச்னை?

தான் அரிய வகை நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மனம் திறந்திருக்கிறார் நடிகை. அவர் அளித்த பேட்டி ஒன்றில் இது குறித்து பேசியிருந்தார் அனுஷ்கா.

Keerthanaa R

தான் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார் நடிகை அனுஷ்கா.

ரெண்டு, சிங்கம், வேட்டைக்காரன், பாகுபலி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் அனுஷ்கா. இவர் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர்.

சமீப காலமாக இவரது படங்கள் எதுவும் வெளியாகவில்லை என்றாலும், இவருக்கு இருக்கும் ரசிகர் பட்டாளம் இன்னும் குறைந்தபாடில்லை.

Anushka

இந்நிலையில், தான் அரிய வகை நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மனம் திறந்திருக்கிறார் நடிகை. அவர் அளித்த பேட்டி ஒன்றில் இது குறித்து பேசியிருந்தார் அனுஷ்கா.

அதில், “எனக்கு சிரிக்கும் வியாதி இருக்கிறது. சிரிப்பது ஒரு வியாதிய என நீங்கள் கேட்கலாம். ஆனால், என் நிலை இது தான்.

நான் சிரிக்க ஆரம்பித்தால் தொடர்ந்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை சிரித்துகொண்டே இருப்பேன். என் சிரிப்பை கட்டுப்படுத்தும் சக்தி என்னிடம் இல்லை. இதனால் பல முறை படப்பிடிப்பை கொஞ்ச நேரம் ஒத்திவைக்கும் நிலை கூட உருவாகியிருக்கிறது” என்றார் அனுஷ்கா

தனது இந்த பிரச்னைக் குறித்த மருத்துவ ரீதியிலான விளக்கத்தையோ அல்லது அதற்காக சிகிச்சை பெற்று வருவதாகவோ நடிகை குறிப்பிடவில்லை. எனினும், இப்படி ஒரு பாதிப்பு தனக்கு இருப்பதாகவும் அதனை அவர் தனிமையில் எதிர்கொண்டு வருவதாகவும் மனம் திறந்திருக்கிறார்.

சமீப காலமாகவே நடிகைகள் தாங்கள் எதிர்கொண்டு வரும் மனம் மற்றும் உடல்நலம் சார்ந்த பிரச்னைகள் குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர்.

கடந்த ஆண்டு சமந்தா மயோசிடிஸ் என்ற ஆட்டோ இம்யூன் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும் கூறியிருந்தார். மலையாள நடிகை மம்தா மோகன்தாஸ் தனக்கு விட்டிலிகோ என்ற ஆட்டோ இம்யூன் நோய் இருப்பதாக அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?