Ilaiyaraja - AR Rahman

 

Twitter

சினிமா

Expo2020 : "Request Accepted" AR ரஹ்மானுடன் இசைமைக்கும் "இளையராஜா"

ஏ.ஆர்.ரஹ்மானின் ட்விட்டை ரீட்விட் செய்த இளையராஜா, "request accepted.. will start composing soon" அதாவது, "கோரிக்கை ஏற்கப்பட்டது.. விரைவில் இசையமைக்கத் தொடங்கலாம்" என பதிலளித்துள்ளார்.

Antony Ajay R

துபாயில் நடைபெற்று வரும் எக்ஸ்போ 2020 இசைக் கச்சேரியில் இசைஞானி இளையராஜாவின் கச்சேரி நேற்று வெற்றிகரமாக ரசிகர்கள் ஆராவாரத்துடன் முடிந்தது. இதனைத் தொடர்ந்து ஏ.ஆர் ரஹ்மானின் ஸ்டூடியோவுக்கு விசிட் அடித்துள்ளார் ராஜா.

அங்கு அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்த ஏ.ஆர்.ரஹ்மான், "மேஸ்ட்ரோவை எங்களின் ஃபிர்தோஸ் ஸ்டூடியோவுக்கு வரவேற்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. எங்கள் ஸ்டூடியோவுக்காக அவர் ஏதேனும் இசை அமைப்பார் என நம்புகிறேன்" என தலைப்பிட்டு பகிர்ந்திருந்தார்.

இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டது. இதற்கு ரசிகர்கள் ஃபயர் விட்டுக் கொண்டாடினர்.

ஏ.ஆர்.ரஹ்மானின் ட்விட்டை ரீட்விட் செய்த இளையராஜா, "request accepted.. will start composing soon" அதாவது, "கோரிக்கை ஏற்கப்பட்டது.. விரைவில் இசையமைக்கத் தொடங்கலாம்" என பதிலளித்துள்ளார்.

இளையராஜாவின் பதில் இசை ரசிகர்களுக்கு பெரு விருந்தாக அமைந்துள்ளது. இசை ராஜாக்கள் இணையும் தருணத்தை எதிர்நோக்கி அனைவரும் காத்திருக்கின்றனர்.

இளையராவின் பதிலை ரீட்விட் செய்த Firdaus Orchestra "காத்திருக்க முடியவில்லை... எக்ஸ்போ 2020-யில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்" எனக் கூறியுள்ளானர்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?