AR Rahman Twitter
சினிமா

AR Rahman: கேன்ஸ் திருவிழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இயக்கிய 'Le Musk'

NewsSense Editorial Team

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இயக்குநராக உருவெடுத்து இயக்கியுள்ள Le Musk என்ற திரைப்படம் கேன்ஸ் XR படத் திருவிழாவில் திரையிடவுள்ளது. 20 வயதில் அனாதையாக்கப்பட்ட ஜூலியட் மெர்டினியன் என்கிற பெண் இசைக்கலைஞர், தன்னுடைய வாழ்வை மாற்றிய ஒரு நபரை தேடிச் செல்லும் பயணம் தான் பற்றிய படம் தான் “Le Musk”. வெறும் 36 நிமிடங்கள் மட்டுமே ஓடக்கூடிய இந்த திரைப்படம் இசை, வாசனை, தொடு உணர்வு உள்ளிட்ட புதிய தொழினுட்பங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கிறது.

Le Musk

இப்படத்திற்கான மூலக்கதையை தன்னுடைய மனைவி சாய்ராவிடம் இருந்து பெற்றிருக்கிறார் ரஹ்மான். ரஹ்மானுக்கும் அவருடைய மனைவிக்கும் வாசனை திரவியங்களின் மீதான காதல் அலாதியானது. அதனடிப்படையில் தான், முழுக்க வாசனை திரவியத்தை மையப்பொருளாக வைத்து ஒரு திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியிருக்கிறது. குராச்சி ஃபீனிக்ஸ் என்பவர் திரைக்கதை எழுத, இசையமைப்பதோடு இல்லாமல் இயக்கவும் செய்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.

”உலகின் பல நாடுகளிலிருந்தும் பல முன்னணி தொழிற்நுட்பக் கலைஞர்கள் “Le Musk” திரைப்படத்திற்காக பல ஆண்டுகளாக உழைத்திருக்கிறார்கள். கதை சொல்கிற எல்லைகளைக் கடந்து, இதற்கு முன்பு வேறு யாரும் செய்திடாத புதியதொரு சினிமா அனுபவமாக இது இருக்க வேண்டும் என்கிற ஒரே நோக்கத்தோடு மட்டுமே இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இசையும், வாசனையும் சேர்ந்து பார்வையாளர்களுக்கு வேறு உலகத்தை இது காட்டும்” என்று ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்தார்.

Nora Arnezeder

முனிரி கிரேஸ் (PURE) மற்றும் மரியம் ஜோராபியன் ஆகியோருடன் இணைந்து நோரா அர்னெசெடர் (Army of the Dead) மற்றும் கை பர்னெட் (Oppenheimer) ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

இண்டெல் நிறுவனத்தின் விர்ச்சுவல் ரியாலிட்டி தொழிற்நுட்ப வல்லுநர் ரவிந்த்ர வெல்ஹல் கூறுகையில், ”இதற்கு முன் பார்வையாளர்கள் அனுபவித்திராத வகையில் இசையும் நறுமணமும் ஒருங்கிணைக்கப்பட்டு இந்த சகாப்தத்தின் இணையற்ற ஒரு விர்ச்சுவல் ரியாலிட்டி திரைப்படமாக இது உருவாகியிருக்கிறது. சினிமாவின் எல்லைகளைக் கடந்து புதியதொரு கதை சொல்லும் முறையை ரஹ்மான் இதில் கையாண்டிருக்கிறார்” என்றார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் ”ARR ஸ்டுடியோஸ்” மற்றும் “ஐடியல் என்டர்டெயின்மென்ட்” ஆகிய நிறுவனங்கள் தயாரித்திருக்கிறார்கள். மேலும் ”தேனாண்டாள் ஸ்டுடியோ” மற்றும் ”பழனி ஆண்டவர்” நிறுவனத்தினரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?