Jayam Ravi as Ponniyin Selvan Twitter
சினிமா

பொன்னியின் செல்வன் : அருள்மொழியா? அருண்மொழியா? - மகுடேஸ்வரன் சொல்வது என்ன?

எல்லா கதாபாத்திரங்களின் பெயர்களும் அந்த போஸ்டர்களில் இடம்பெற்றிருந்தன. ஜெயம் ரவியின் பெயர், அருள்மொழி வர்மன் என்றில்லாமல், அருண்மொழி வர்மன் என்று எழுதப்பட்டிருந்தது.

Keerthanaa R

அமரர் கல்கி எழுதிய காவிய நூலான பொன்னியின் செல்வன், மணிரத்னத்தின் இயக்கத்தில், திரைப்படமாக, இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. Magnum Opus என்றழைக்கப்படும் இத்திரைப்படத்தின் முதல் பாகம், வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகவுள்ளது.

மணிரத்னத்தின் ட்ரீம் பிராஜெக்ட் ஆன பொன்னியின் செல்வன் திரைப்படத்தில், ஆதித்த கரிகாலனாக விக்ரம், குந்தவையின் கதாபாத்திரத்தில் த்ரிஷா, பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவி, வந்தியத்தேவனாக கார்த்தி, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், சுந்தர சோழனாக பிரகாஷ் ராஜ், பெரிய பழுவேட்டரையாராக சரத்குமார் சின்ன பழுவேட்டரையராக பார்த்திபன் ஆகியோர் நடிக்கின்றனர். கதையின் இன்னும் சில முக்கிய வேடங்களில், திரையுலகின் பெறும் புள்ளிகள் நடிக்கிறார்கள்.

முக்கிய கதாபாத்திரங்களின் லுக் முன்னரே ஒரு முறை வந்திருந்தாலும், கடந்த ஒருவாரமாக படக்குழு வந்தியத்தேவன், ஆதித்த கரிகாலன், நந்தினி, குந்தவை ஆகியோரின் லுக் வெளியிடப்பட்டது. கடைசியாக, பொன்னியின் செல்வனாக நடிக்கும் ஜெயம் ரவியின் லுக்கும் வந்தது.

எல்லா கதாபாத்திரங்களின் பெயர்களும் அந்த போஸ்டர்களில் இடம்பெற்றிருந்தன. ஜெயம் ரவியின் பெயர், அருள்மொழி வர்மன் என்றில்லாமல், அருண்மொழி வர்மன் என்று எழுதப்பட்டிருந்தது.

புத்தகத்தை படித்த பலரும் இதை கவனித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். தமிழ் மொழியில் 'ள்' என்ற எழுத்திற்குப் பிறகு, 'ம', 'ந' போன்ற எழுத்துகள் வருமாயின், அவ்வார்த்தைக்கு மாறாக முச்சுழி 'ண'கரம் தோன்றும். அதே போல, ல் என்ற எழுத்துள்ள வார்த்தைகளில் அது இரட்டைச்சுழி 'ன'கரம் தோன்றும். ஆக, அருள்மொழி வர்மனது பெயர் அருண்மொழி வர்மன் என்று எழுதுவதில் பிழை எதுவும் இல்லை என்கிறது, இவ்விளக்கம்.

தவிர, கர்நாடக இசைக்கலைஞர்கள் பலரும் இந்த ள, ல, போன்ற எழுத்துகளின் உச்சரிப்பை ண என்ற சப்தத்தில் வருமாறு பயன்படுத்துவதையும் நாம் கேட்டிருப்போம்.

ஆக, அருண்மொழி என்ற பெயர் ஒரு புணர்ச்சி வடிவமே ஆகும். அருள்மொழி என்றெழுதினால் அது தூய தமிழ்ப்பெயராகிறது.

இதன் விளக்கத்தை கவிஞர் மகுடேஸ்வரன் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

ஆனால், புத்தகத்தில் அமரர் கல்கி அருள்மொழி வர்மன் என்று பயன்படுத்தியிருப்பதால், இது தமிழ் திரைப்படம் என்பதால், அது அருண்மொழியாக இல்லாமல், அருள்மொழியாகவே இருந்திருக்கலாம் என்பது பரவலான கருத்து.

மூன்று முறை எடுக்க முயன்று நிறைவேறாமல் போன கனவு

இதை திரைப்படமாக எடுக்கவேண்டும் என்பது எம்ஜிஆர் காலம் தொட்டு, பல தமிழ் இயக்குநர்களின், நடிகர்களின் கனவாக இருந்து வருகிறது. எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சரோஜா தேவி என அந்த கால நடிகர்கள், கதையின் முக்கிய பாத்திரங்களாக நடிக்கவிருந்தனர். இதை எம்ஜிஆரே இயக்கவும் விரும்பினார். ஆனால் உடல்நிலைக் காரணமாக இந்த ஆசை ஈடேறவில்லை. வந்தியத்தேவனாக எம்ஜிஆர் நடிக்கவேண்டும் என்பதும் அவரது ஆசை.

கமலும் எம்ஜிஆரும்

பின்னர், இயக்குநர் பாலு மஹெந்திரா எழுத, பாரதிராஜாவின் இயக்கத்தில், கமல்ஹாசன், ஸ்ரீதேவியை வைத்து எம்ஜிஆரின் தயாரிப்பில் எடுக்கலாம் என்று முடிவானது. ஆனால், இம்முறையும் இது வெறும் பேச்சுவார்த்தையாகவே முடிந்துவிட்டது. இத்தகவலினை ஒரு முறை இயக்குநர் பாரதிராஜாவே பகிர்ந்திருந்தார்.

கமல், ரஜினி, விஜயகாந்த், மணிரத்னம்

பின்னர் கமல்ஹாசன் மணிரத்னம் இணைந்து இந்நூலை படமாக்கலாம் என்றும் முயற்சித்தனர். அப்படி எடுக்கப்பட்டிருந்தால், கமல் அருள்மொழி வர்மனாகவும் , ரஜினிகாந்த் வந்தியத்தேவனாகவும், விஜயகாந்த் ஆதித்த கரிகாலனாகவும் நடித்திருக்கலாம் என்பது கூற்று. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இம்முறையும் படம் கைவிடப்பட்டது.

இப்படி மூன்று முறை தடங்கலாகிப்போன பின், 2019ல் இயக்குநர் மணிரத்தினம் இத்திரைப்படத்தை எடுக்க முன்வந்தார். படம் குறித்த தகவல் வெளியானதிலிருந்தே, யார் யார் எந்த எந்த கதாபாத்திரத்தில் நடிப்பார் என்பது பலரின் கேள்விகளாக இருந்தது.

அமரர் கல்கியின் இந்த கற்பனைக் கலந்த வரலாற்றுப் புதினம், மணியம் அவர்களின் சித்திரங்கள் என புத்தகத்தை படிக்கும்போதே நமக்குக் கண்களில் அக்காட்சிகள் தோன்றும். படமாக்குவது என்றால் சாதாரண விஷயமல்ல.

அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் இத்திரைப்படத்தின் டீசர், இன்று வெளியாகி கிட்டத் தட்ட ஒரு மில்லியன் வியூக்களை பெற்றிருக்கிறது.

இதே போல, ஆதித்த கரிகாலனின் பெயரும் ஆதித்திய கரிகாலன் என்று தான் இருக்கிறது.

பெயர்களில் வரும் இம்மாற்றங்களுக்கான காரணத்தை, படக்குழு தான் தெளிவுபடுத்த வேண்டும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?