Kalaavathi , Arabic Kuthu

 

Twitter

சினிமா

Beast : கலாவதி பாடலின் சாதனையை முறியடித்த அரபிக் குத்து

அனிரூத் - ஜோனிடா காந்தி பாடியுள்ள இந்த பாடலுக்கு சிவகார்த்திகேயன் வரிகள் எழுதியுள்ளார். புட்ட பொம்மா, காந்த கண்ணழகி பாடல்களுக்கு கோரியோகிராப் செய்த ஜானி மாஸ்டர் நடன இயக்கத்தில் விஜய்-ன் ஸ்டெப்ஸ் மாஸ்!

Antony Ajay R

அடுத்தடுத்து இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து வரும் தளபதி விஜய் அட்லி, லோகேஷ் கனகராஜ் வரிசையில் டாக்டர் படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமாருடன் இணைந்து பணியாற்றியுள்ள திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தின் முதல் பாடலான அரபிக் குத்து நேற்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

அனிரூத் - ஜோனிடா காந்தி பாடியுள்ள இந்த பாடலுக்கு சிவகார்த்திகேயன் வரிகள் எழுதியுள்ளார். புட்ட பொம்மா, காந்த கண்ணழகி பாடல்களுக்கு கோரியோகிராப் செய்த ஜானி மாஸ்டர் நடன இயக்கத்தில் விஜய்-ன் ஸ்டெப்ஸ் மாஸ்!

Arabic Kuthu

வெளியானது முதல் ரசிகர்கள் அரபிக் குத்து பாடலை மனதுக்குள் முனுமுனுத்துக் கொண்டிருக்கிறார்கள். அரபிக் குத்து பாடலைப் போல தெலுங்கு காதலர் தின ஸ்பெசலாக வெளிவந்த பாடல் கலாவதி.

மகேஷ்பாபு, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி உள்ள சர்காரு வாரிபட்டா என்கிற படத்தில் இடம்பெறும் கலாவதி பாடல் ரிலீசாகி ஒரே நாளில் 16 மில்லியன் பார்வைகளைப் பெற்று சாதனை படைத்திருந்தது.

Vijay

தெலுங்கு - தமிழ் ரசிகர்கள் அடிக்கடி இணையத்தில் போட்டிப் போட்டுக்கொள்வது தொடர்கிறது. அந்த போட்டியில் அரபிக் குத்து மற்றும் கலாவதி பாடல்கள் இணைந்துள்ளன.

இதற்கு முன் புஷ்பா படத்தின் ஊ அன்டா வா மாமா பாடல் விரைவாக விரைவாக 16 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனைப் படைத்திருந்தது.

16 மில்லியன் பார்வையாளர்களை விரைவில் கடக்குமா? என்கிற கேள்விக்கே இடமின்றி 10 மணி நேரத்தில் கலாவதி பாடலின் சாதனையை முறியடித்தது அரபிக் குத்து. இரண்டு பாடல்களுமே ஹிட். இரண்டு பாடல்களுக்குமே இரண்டு மொழி ரசிகர்களும் ஆதரவளித்து வருகின்றனர்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?