Netflix: தரமணி முதல் விசாரணை வரை நிச்சயம் பார்க்க வேண்டிய 10 தமிழ் படங்கள்  Twitter
சினிமா

Netflix: தரமணி முதல் விசாரணை வரை நிச்சயம் பார்க்க வேண்டிய 10 தமிழ் படங்கள்

இந்த படங்களை இதுவரை நீங்கள் பார்த்திருக்கவில்லை என்றால் பார்க்கும் போது நிச்சயமாக "இதை மிஸ் பண்ணிட்டோமே" என வருத்தப்படுவீர்கள்.

Antony Ajay R

ஓடிடி இருந்தபோதிலும் அதிலிருக்கும் எக்கச்சக்க ஆப்ஷன்களால் எந்த படங்களைப் பார்ப்பது என குழம்புபவர்கள் பலருண்டு. அப்படிப்பட்ட ஒருவர்தான் நீங்களென்றால் உங்களுக்காகத்தான் இந்த பதிவு!

கிடைக்கும் இடைவெளி நேரங்களில் படங்களைப் பார்க்கும் பழக்கம் பெருகியிருக்கிறது. அவரவர் வேலைகளில் எல்லாருமே பிசியாக இருக்கும் போது நமக்கு உற்றத் துணையாக இருப்பது திரைப்படங்கள் தான்.

நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளம் இருந்தால் நம்மால் பல தமிழ் படங்களைப் பார்க்க முடியும். அதில் சில படங்களை இதுவரை நீங்கள் பார்த்திருக்கவில்லை என்றால் பார்க்கும் போது நிச்சயமாக "இதை மிஸ் பண்ணிட்டோமே" என வருத்தப்படுவீர்கள்.

அப்படிப்பட்ட 10 படங்களை இங்கு தொகுத்திருக்கிறேன்!

தரமணி (tharamani)

இயக்குநர் ராம் இயக்கத்தில் ஆண்ட்ரியா, வசந்த் ரவி நடித்த திரைப்படம் தரமணி. அடிப்படையில் இது ஒரு காதல் கதை என்றாலும், நவீன வாழ்க்கைமுறைப் பற்றி பல கேள்விகளை எழுப்புவதாக திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும்.

"திருடர்கள் நம்மிடம் திருடுவார்கள், போலீஸ்காரர்கள் திருடர்களிடமும் நம்மிடமும் திருடுவார்கள், மருத்துவமனைகள் போலீஸ், நாம், திருடர்கள் என எல்லாரிடமும் திருடுவார்கள். வாழ்க ஜனநாயகம்"

இப்படி ஒரு வசனத்தை திரைப்படத்துக்கு இடையில் இயக்குநர் பேசுவார். இதுபோல அவர் பேசக் கூடிய வசனங்கள் படத்துக்கு கூடுதல் சுவை சேர்த்திருக்கும். ஆண்ட்ரியா ஒரு நடிப்பு பிசாசு என்பதை இந்த படத்தின் மூலம் நீங்கள் அறிய முடியும்.

சூப்பர் டீலக்ஸ் (Super Deluxe)

இயக்குநர் தியாகராஜா குமாரராஜாவின் காவியம் என்றே இந்தப் படத்தைக் கூறலாம். 4 கதைகள் ஒன்றுடன் ஒன்று சந்திக்கும் திரைக்கதை.

ஒவ்வொரு கதைக்கும் ஒவ்வொரு தன்மை, உணர்வுகள் இருக்கும். இந்திய சமையலில் உப்பு, காரம், புளிப்பு, துவர்ப்பு என வித்தியாசமான சுவைகளைக் கொண்ட மசாலாக்கள் சிறப்பான உணவைத் தருகிறதோ அப்படி ஒரு நிறைவான உணர்வை உருவாக்கக்கூடிய திரைப்படம் சூப்பர் டீலக்ஸ்.

திருநங்கையாக விஜய் சேதுபதி, குழந்தை அஸ்வின், அம்மாக்களாக காயத்ரி, ரம்யா கிருஷ்ணன், மத போதகராக மிஷ்கின், 4 சிறுவர்கள், கணவன் மனைவியாக சமந்தா - ஃபகத் பாசில் வில்லனாக பக்ஸ் என எல்லாரது அட்டகாசமான பர்பாமன்ஸையும் பார்க்க சூப்பர் டீலக்ஸ் ஒரு அரிய வாய்ப்பு!

சூப்பர் டீலக்ஸ் (Super Deluxe)

மண்டேலா (Mandela)

யோகிபாபுவை இப்போது சிலப் படங்களில் கதாநாயகனாக பார்க்க முடிகிறது. இந்தப்படங்களுக்கு கலவையான விமர்சனங்கள் வருகிறது.

யோகிபாபுவை எப்படி சிறந்த கதாநாயகனாக பயன்படுத்த வேண்டும் என பாடமெடுக்கும் படம் மண்டேலா! சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தை இயக்கிய மடோன் அஸ்வினின் முதல் படம் இது.

நல்ல பாடல்கள், எளிமையான கதை, கிராமத்து வாசம் மிக்க காட்சிகளுடன் கண்டுகளிக்க மண்டேலா சிறந்த தேர்வாக இருக்கும்.

மண்டேலா (Mandela)

கடசீல பிரியாணி (Kadaseela Biriyani)

மூன்று சகோதரர்களின் பழிவாங்கும் படலம் தான் கடசீல பிரியாணி. ஆனால் 3 ஆடுகள் சேர்ந்து ஒரு சிறுத்தையை பழிவாங்குவது போன்றது என்பது பாதியில் தான் தெரியவருகிறது.

அந்த கடைசி கடக்குட்டி ஆடு காட்டில் சிறுத்தையிடம் மாட்டித் தப்பித்ததா? இல்லையா? என்பது தான் கதை. கதைக்களம் கேரளமாக இருப்பதால் ஒரு பக்காவான மலையாள த்ரில்லர் பார்த்த அனுபவம் கிடைக்கும்!

மெர்சல் (Mersal)

இன்று ஜாவானுடன் பாலிவுட்டை கலக்கிக் கொண்டிருக்கும் அட்லி, தளபதி விஜய் செய்த சிறப்பான தரமான சம்பவம் என்றால் அது மெர்சல் தான்.

இந்த படத்தைப் பார்க்காமல் இருப்பவர்கள் மிகக் குறைவுதான். கில்லி, திருப்பாச்சி போல பலமுறை ரீவாட்ச் செய்யத் தகுந்த திரைப்படம் மெர்சல்.

மாமன்னன் (Mamannan)

அமைச்சர் உதயநிதியின் கடைசிப் படமாக வெளிவந்து பல சர்ச்சைகளையும் விவாதங்களையும் ஏற்படுத்திய திரைப்படம் மாமன்னன்.

தமிழ் சினிமாவை அடுத்த கட்ட பரிமாணத்துக்கு எடுத்துச் செல்லும் இயக்குநர்களில் ஒருவராக இருக்கும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ஃபகத் ஃபாசிலின் வெறித்தனமான நடிப்பைக் காணலாம்.

வடிவேலு இதுவரை இல்லாத வேறுபட்ட பாத்திரத்தில் நடித்திருப்பார். ஒரு இளைஞன் தனது அடிப்படையான சுய மரியாதையைக் காத்துக்கொள்ள முடியாத சூழல் இந்த சமூகத்தில் நிலவுவதைக் கேள்வி கேட்கும் படம்தான் மாமன்னன்!

Mamannan

நித்தம் ஒரு வானம் (Nitham Oru Vanam)

அசோக் செல்வன், ரிது வர்மா நடிப்பிலான ஒரு ஃபீல் குட் திரைப்படம் நித்தம் ஒரு வானம். இன்றைய காலக்கட்டத்தில் சமூக வலைத்தளம் முழுவது மன அழுத்தத்துக்கு மருந்து பயணங்கள் தான் என்ற பதிவுகளைப் பார்க்க முடிகிறது.

மன அழுத்தத்தில் சிக்கிக்கொண்ட அசோக் செல்வன் ஒரு பயணத்தை மேற்கொள்கிறார். அவருடன் பாதியில் இணைந்துகொள்கிறார் ரிது வர்மா!

இவர்களுக்கு இந்த பயணத்தில் கிடைத்தது என்ன? அசோக் செல்வன் மன அழுத்தத்தில் இருந்து மீண்டாரா என்பதுதான் கதை.

இடையில் அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா போன்ற நாயகிகளும் எண்ட்ரி கொடுத்திருப்பார்கள். இந்த படம் வாழ்க்கை பற்றிய உங்களது புரிதலை சிறிதளவேணும் மேம்படுத்தும் என்பது என் நம்பிக்கை!

நித்தம் ஒரு வானம் (Nitham Oru Vanam)

சில்லு கருப்பட்டி (Sillu Karupatti)

மற்றொரு ஃபீல்-குட் அந்தாலஜி சில்லு கருப்பட்டி! பூவரசம் பீபீ, ஏலே படங்களை இயக்கிய ஹலிதா ஷமீமின் சிறந்த படைப்பு என இதைக் கூறலாம்.

4 காதல்கதைகளை அடக்கியது இந்த திரைப்படம். சிறுவர்களுக்கு இடையிலான ஒரு கதை, இளைஞர்களுக்கு இடையிலான ஒரு கதை, நடுத்தர வயதுவந்த தம்பதியின் காதல் கதை, வயோதிகர்களின் காதல்கதை என வாழ்வின் 4 படிநிலைகளில் இருப்பவர்களின் காதல் வெளிப்பாடு பார்ப்பவர்களுக்கு தாலாட்டுப் போல இருக்கும்.

ஆனாலும் நாம் தூங்கிவிடாதவாறு சுவாரஸ்யமானதாகவும் கதைகள் இருக்கும். பிரதீப் குமாரின் இசை காதில் தேன் வந்து பாய்வதைப் போல இருக்கும். காதலை விரும்புபவர்கள் நிச்சயம் சில்லுக்கருப்பட்டியை விரும்புவார்கள்.

விசாரணை (Visaranai)

சமுக பொறுப்புணர்வுடன் திரைப்படங்களை இயக்கிவருபவர் வெற்றி மாறன். இவர் சிறிய பட்ஜெடில், பெரிய நட்சத்திரங்கள் இல்லாமல் உருவாக்கிய திரைப்படம் விசாரணை.

லாக்கப் என்ற நாவலின் தாக்கத்தில் உருவானது. கர்நாட காவல்துறை போலியாக வழக்கு பதிவு செய்ய 3 தமிழக இளைஞர்களை கைது செய்கிறது. அவர்கள் மீது நடத்தப்படும் அட்டூழியங்கள், வன்முறை, கொடுமைகளை கொஞ்சம் வெளிப்படையாகவே படமாக்கியிருப்பர்.

அங்கிருந்து தப்பித்தார்களா? மனசாட்சியற்ற அதிகாரத்துக்கும் எளிய மனிதர்களுக்குமான போராட்டத்தின் முடிவுதான் என்ன என்பதை படம் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

விசாரணை (Visaranai)

மேற்கு தொடர்ச்சி மலை (Merku Thodarchimalai)

மலை வாழ் மக்களின் வாழ்வையும், சில தசாப்தங்களுக்கு முன் ஏற்பட்ட வாழ்வியல் மாற்றங்களையும் பேசுவதுதான் மேற்கு தொடர்ச்சி மலை.

இயக்குநர் லெனின் இயக்கிய இந்த படம் பல விருதுகளை வென்றுள்ளது. நில உடைமைதாரர் - நிலமற்ற மக்கள் இடையிலான முரண்கள், பெரும் நிறுவனங்களின் ஊடுருவல் - அதனால் மக்கள் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றை இந்த கதை வெளிப்படுத்தும்.

நம் தென்னிந்தியாவின் சொத்தான மேற்கு தொடர்ச்சி மலையில் கதை நகருவதனால் எந்த பக்கம் கேமராவை திருப்பும் போது அழகான ஃப்ரேமாக தெரிவதைப் பார்க்கலாம். கதை கொஞ்சம் மெதுவாக நகரும் என்பதனால் பொருமையாக பார்த்து உள்வாங்கிக்கொள்ள வேண்டிய படமாக இருக்கும்.

மேற்கு தொடர்ச்சி மலை (Merku Thodarchimalai)

இவைத்தவிர நெட்ஃப்ளிக்ஸில், கேம் ஓவர், குதிரைவால், ஒத்த செருப்பு, அந்தகாரம், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு போன்ற பரிட்சாதைய முறையில் எடுக்கப்பட்ட படங்களைப் பார்க்கலாம்.

மெஹந்தி சர்கஸ், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், பேட்ட, ஜகமே தந்திரம், சைகோ, தம்பி, துணிவு, லவ் டுடே, டாக்டர் போன்ற திரைப்படங்கள் உங்களுக்கு தரமான பொழுதுபோக்காக அமையும்.

நட்சதிரம் நகர்கிறது, அஸ்வின்ஸ், மகாமுனி, சர்வம் தாளமயம், அன்பே சிவம், ஏலே, சம்டைம்ஸ், கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற படங்களுக்கும் உங்கள் வாட்ச் லிஸ்டில் வைத்துக்கொள்ளும் தகுதி இருக்கிறது!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?