மனைவியை கொஞ்சமும் மதிக்க தெரியாத கணவன் கோபியால் அன்றாடம் அவமானங்களை சந்திக்கும் அப்பாவி பெண்ணின் கதாப்பாத்திரமாக சித்தரிக்கப்பட்டிருப்பவர் தான் பாக்கியலட்சுமி. பாக்கியா எந்தளவுக்கு இன்னோசண்ட் என்றால், தன் மகள் இன்ஸ்டாவில் தனக்கு நிறைய ஃபாலோயர்ஸ் இருப்பதாக சொல்லும் போது, ``என்னது உன்ன நிறைய பேர் ஃபாலோவ் பண்றாங்களா, ஏன் என் கிட்ட இத நீ முன்னாடியே சொல்லல, அவனுகள ஒரு வழி பன்றேன் வா’’ என்று கோவப்படும் அப்பாவி தான் பாக்யா. ஆனால் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்பது போல் சமையல் பிஸ்னஸில் தெறிக்க விடுகிறார்.
பாக்கியலட்சுமி சீரியல்
போன் மூலம் ஆர்டர் செய்பவர்களுக்கு பைக்கில் சென்று டோர் டெலிவரி செய்கிறார். இதில் இருக்கும் தெளிவு சொந்த வாழ்க்கையில் இல்லையே என்பது தான் ரசிகர்களின் ஆதங்கம். நீட்டி முழக்காமல் விஷயத்துக்கு வருகிறேன்.
தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளைகள் இருப்பதை மறந்த கோபி, தன் கல்லூரி கால சிநேகிதி ராதிகாவை திருமணம் செய்ய முடிவெடுக்கிறார். செழியனின் மனைவி ஜெனிக்கு அபார்ஷன் ஆகாமல் இருந்திருந்தால் இந்நேரம் கோபி, தாத்தா ஆகியிருப்பார் என்பது குறிப்பிட வேண்டிய விஷயம். சரி பரவாயில்லை, காதலுக்கு வயது ஒரு தடையா என்ன?
பாக்கியலட்சுமி சீரியல்
கோபி பாக்கியலட்சுமியை ஏமாற்றி, பொய் சொல்லி, விவாகரத்து தொடர்பான பேப்பர்களில் கையெழுத்து வாங்கி கொள்கிறார். இது கூட பரவாயில்லை. கோர்ட்டில் என்னவென்றே தெரியாமல் ஜட்ஜ் கேட்கும் கேள்விகளுக்கு சரி சரி என்று பதில் சொல்கிறார் பாக்யா. விவாகரத்து என்ற வார்த்தையே பயன்படுத்தாமல், கோர்ட்டில் விவாகரத்து வழக்கு நடக்கிறது. ``இதென்னய்யா லாஜிக்?’’ ``இந்த காலத்துல இவ்வளவு முட்டாளா எந்த பொண்ணும் இருக்க மாட்டா’’ , என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
பாக்கியலட்சுமி சீரியல்
பாக்கியலட்சுமி தொடரின் இயக்குனரையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பலர் விஜய் டிவியின் இன்ஸ்டா மற்றும் யூ டியூப் பக்கங்களில், #WesupportGopi என்று ஹேஷ் டேக் போட்டு கலாய்த்து வருகின்றனர். எது எப்படியே கோபி அங்கிள் தன் காதலி ராதிகாவை மணமுடிக்க க்ரீன் சிக்னல் விழுந்து விட்டது!