Bharathi Kannamma Twitter
சினிமா

பாரதி கண்ணம்மா: இயக்குநருக்கு குவியும் பாராட்டு! - இன்றைய எபிசோடில் Emotional Moments

Keerthanaa R

விஜய்  டிவி-யின் டாப்  சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த வாரம் டி.ஆர்.பி.யில் முதல் இடம் பிடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.  மேலும் இந்த வாரம் ஒளிபரப்பான இரண்டு எபிசோடுகளும் மிகவும் சுவாரஸ்யமாக இருந்ததாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

பாரதியும் கண்ணம்மாவும் பணிக்கு சேர்ந்திருக்கும் புதிய மருத்துவமனையில், ஒரு குழந்தைக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த எபிசோட் தொடர்பான புரோமோக்கள் வெளியான போதெல்லாம் ரசிகர்கள் கலாய்த்து தள்ளினர். காரணம் சென்னையில் ஒரு நாள் கதையை அப்படியே காப்பி அடித்து காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குனர் பிரவீன் பென்னட்.

Bharathi Kannamma

இந்த கான்செப்ட்டின் ஆரம்பத்தில் நிறைய விமர்சனங்கள் இருந்தாலும், குழந்தையின் இதயத்தை சென்னைக்கு எடுத்து கொண்டு வரும் காட்சிகளை அற்புதமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் பிரவீன். பாரதி, கண்ணம்மா இருவரின் நடிப்பும் ஆத்மார்த்தமாக இருந்தது.  

இருதய மாற்று அறுவை சிகிச்சையில் தடைகள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக கண்ணம்மா தீவிரமாக செயல்படுகிறார். வானிலை அறிக்கையை சுட்டிக்காட்டி பாரதியிடம் மழை வர வாய்ப்புகள் இருக்கிறது, எனவே சாலை மார்க்கமாக இதயத்தை கொண்டு வருவது ரிஸ்க் என்கிறார். ஆனால் கணேஷ் என்பவர் கண்ணம்மாவுக்கு எதிராக பிளான் செய்து, சொதப்பி விடுகிறார். ஆம்புலன்சில் இருந்து கண்ணம்மாவை இறக்கி விட்டுவிட்டு சென்று விடுகின்றனர். பாரதி இதயத்தை கொண்டு வரும் வழியில் பலத்த மழை  செய்து, போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது.

Comments

செய்வதறியாமல் பாரதி கதறி அழுகிறார், அந்த சமயத்தில் தான் கண்ணம்மா இன்னொரு ஆம்புலன்ஸில் வந்திறங்குகிறார். அனைவரும் அதிர்ச்சியில் உறைகின்றனர். ``எதுக்கும் சேஃப்டிக்காக நம்ம ஆம்புலன்ஸ்ல உங்கள ஃபாலோ பண்ணிட்டு வந்தேன்’’ என்கிறார். பாரதி பெருமூச்சு விட்டு, குழந்தையின் இதயத்துடன் ஆம்புலன்ஸில் ஏறுகிறார். 

இந்த காட்சியை பார்த்த அனைவரும் கண்டிப்பாக எமோஷ்னல் ஆகியிருப்பார்கள். கண்ணம்மா ஆம்புலன்சில் இருந்து இறங்கும் போது, பின்னணியில் மனிதி வெளியே வா பாடல் ஒலிக்கும், செம தேர்வு அது. அந்த பாடல், மழை, கண்ணம்மாவின் நடிப்பு, பாரதியின் ரியாக்‌ஷன் என அனைத்துமே பெர்ஃபக்டாக பொருந்தி, ரசிகர்களை எமோஷ்னல் ஆக்கிவிட்டது. இந்த காட்சிக்காக பிரவீன் பென்னட்டை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Bharathi Kannamma

இன்றைய எபிசோடில் பிரஸ் மீட்டில், கண்ணம்மா பாரதி மற்றும் ஒட்டுமொத்த மருத்துவமனை ஊழியர்களையும் பாராட்டிப் பேசுகிறார்.  செய்தியாளர் சந்திப்பு நடந்து கொண்டிருக்கும்போதே மயங்கி விழுகிறார் கண்ணம்மா. பதறிப் போன பாரதி, கண்ணம்மாவை அக்கறையுடன் பார்த்து கொள்கிறார். பாரதி கண்ணம்மாவின் காதல் கிராஃப் கொஞ்சம் கொஞ்சமாக மேல் நோக்கி நகர்ந்து வருகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?