Biggboss 7 : மாயாவிடம் மன்னிப்பு கேட்ட சரவண விக்ரம் - கோபத்தில் தங்கை போட்ட பதிவு Twitter
சினிமா

Biggboss 7 : மாயாவிடம் மன்னிப்பு கேட்ட சரவண விக்ரம் - கோபத்தில் தங்கை போட்ட பதிவு

Priyadharshini R

பிக்பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 100 நாட்களை கடந்து இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணி மா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவண விக்ரம், மாயா , விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, அன்னபாரதி, கானா பாலா, அச்சனா, பிராவோ, தினேஷ் என்று பலர் கலந்துக்கொண்டனர்.

தற்போது இதில் இறுதி போட்டியாளர்களாக விஷ்ணு, மாயா, மணிசந்திரா, தினேஷ், அச்சனா ஆகியோர் இருக்கின்றனர்.

கடந்த வாரம் பணப் பெட்டி டாஸ்க் நடந்தது. இதில் பூர்ணிமா ரவி 16 லட்ச ரூபாய் பணத்துடன் வெளியேறினார்.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் தான் கடைசி வாரம் என்பதால் வெளியில் சென்ற போட்டியாளர்கள் உள்ளே வர ஆரம்பித்து விட்டனர்.

பிக் பாஸ் வீடு கலகலப்பாக உள்ளது. போட்டியாளராக இருந்து வெளியே சென்ற விக்ரம் உள்ளே வந்தவுடன் மாயாவிடம் மன்னிப்பு கேட்டு அவருக்கு ஆதரவாக பேசினார்.

விக்ரம் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த போது அவருக்கு எதிராக பல வேலைகளை மாயா-பூர்ணிமா இருவரும் செய்ததாக விக்ரமின் தங்கை கூறிவிட்டு சென்றார். அந்த வாரமே விக்ரமும் எவிட் ஆனார். தற்போது மீண்டும் வந்தவர் உள்ளே இருந்த விக்ரம் மாயாவிடம் மன்னிப்பு கேட்கும் வகையில் பேசியுள்ளார்.

இதனை தொடர்ந்து விக்ரமின் தங்கை விக்ரமிற்கு எதிராக ஒரு போஸ்ட் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த போஸ்ட் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?