Darlings Twitter
சினிமா

Boycott Aliabhat : ஆலியா பட்டை எதிர்க்கும் ஆண்கள் - என்ன காரணம்?

Keerthanaa R

பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் நடித்துள்ள டார்லிங்க்ஸ் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது. இதனை பார்த்த இணையவாசிகள் பலரும், நடிகையின் மேல் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

முக்கியமாக ஆண்கள் பலரும் BoycottAliabhat என்ற ஹேஷ் டேகை டிரெண்டாக்கி வருகின்றனர். காரணம், இந்த டிரெய்லரில், ஆலியா பட், மற்றும் அவரது தாயார் இன்னொரு ஆணுடன் சேர்ந்து ஆலியாவின் கணவனை அடித்துத் துன்புறுத்தும் விதமான காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

அவரை ஒரு கட்டத்தில், நாற்காலியில் கட்டிவைத்து, அடிப்பது, உணவு, மது பானம் போன்றவற்றைத் திணிப்பது போல் காட்சிகள் உள்ளன. மேலும் ஒரு இடத்தில் ஆலியா தன் கணவருக்கு ஊசி ஒன்றை வலுக்கட்டாயமாக போடும் காட்சியும் இடம்பெற்றிருந்தது.

இதனால் டார்லிங்க்ஸ் திரைப்பட டிரெய்லர் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது ஆண்களுக்கு எதிரான குடும்ப வன்முறையைத் தூண்டுவதாக இருக்கிறது என்பது இவர்களது வாதம் . இதன் காரணமாக டிவிட்டரில் #BoycottAliabhatt என்ற ஹேஷ் டேக் டிரெண்டாகி வருகிறது

ஆனால் டிரெய்லரை முழுவதுமாக பார்த்தால் ஒரு கட்டத்தில் ஆலியா தனது தாயிடம் இவ்வாறு கூறுவதை நாம் கவனிக்கலாம். அதாவது, தான் தன் கணவரை கொலை செய்ய விரும்பவில்லை என்றும், திருமணமான போது தன் கணவர் தன்னை எப்படி நடத்தினாரோ, என்ன கொடுமைகளுக்கு ஆளாக்கினாரோ, அவ்வாறே தானும் செய்ய நினைப்பதாக குறிப்பிடுவார்.

டிரெய்லரிலேயே இந்த விளக்கம் இருந்தபோதிலும், ரசிகர்கள் இந்த திரைப்படத்தையும், நடிகை ஆலியாவையும் எதிர்த்து வருகின்றனர்.

மேலும் திரைப்படம் இன்னும் வெளியாகாத நிலையில் முழுவதுமாக இதன் பின்னணி என்ன என்று தெரியாமல் கருத்துகளை ஒருதலைப்பட்சமாக பார்க்க வேண்டாம் என்றும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.

இன்றளவும், வீடுகளில் குடும்ப வன்முறைக்கு ஆண், பெண், குழந்தைகள் என அனைவரும் ஆளாக்கப்பட்டு வருகின்றனர். அனைவரையும் எளிதில் சென்றடையும் ஒரு கருவியாக இருக்கும் சினிமா இந்த விஷயத்தை திரையில் காட்சிப்படுத்துவதால், இது போன்ற வன்முறைகளை ஊக்குவிக்கும் விதமாக இருக்கிறது என்பது ஒரு தரப்பினரின் கருத்து.

நாளை பிரபல ஓடிடி தளமான Netflixல் டார்லிங்க்ஸ் திரைப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?