பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தை இயக்குநர் தவறாக சித்தரித்துள்ளார் என்று குற்றம் சாட்டி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கல்கியின் பொன்னியின் செல்வன் புதினம் படமாக்கப்பட்டுள்ளது. இதில் பிரபல வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடிகர் கார்த்தி நடித்திருந்தார்.
புத்தகம் வந்தியத்தேவனின் சோழ நாடு நோக்கிய பயணத்தில் துவங்கும். அவனது கண் வழியாகவே நமக்கு கதாபாத்திரங்கள் அறிமுகமாகும். அதனாலேயே பொன்னியின் செல்வன்(அருள்மொழி வர்மன்) கதாபாத்திரத்தை நாம் பார்க்க நேரம் எடுக்கும்.
நந்தினி, குந்தவை, பூங்குழலி என மூன்று முக்கிய பெண் கதாபாத்திரங்களோடும் பயணிப்பான் வந்தியத்தேவன். படத்தில், இவர்கள் மூவரோடும் காதல் உரையாடும் வாலிபனாகவும், பெண்களின் பின்னால் சுற்றித் திரியும் காதல் மன்னனாக சித்தரிக்கப்பட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இயக்குநர் மணிரத்னம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், "பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வரலாற்றை பொய்மைபடுத்தியும், திரித்தும் கூறி படம் எடுக்கப்பட்டுள்ளது. உண்மைக்கு புறம்பாக சில காட்சிகள் சித்திரிக்கப்பட்டுள்ளது. வந்தியத்தேவன் கதாபாத்திரம் பெண்கள் பின்னால் திரியும் காதல் மன்னன் போல் பொய்யாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மனதில் தவறான எண்ண அலைகளை இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் மணிரத்னம் கொண்டு சேர்த்துள்ளார். தஞ்சை பெரிய கோயிலில் உள்ள கல்வெட்டுகளில் இருக்கும் சோழபேரரசின் உண்மையான வரலாற்றை மறைத்து தவறு இழைத்துள்ளார்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust