தீபிகா படுகோனே Twitter
சினிமா

ஜவான் படத்திற்காக சம்பளம் எதுவும் வாங்காத தீபிகா படுகோன் - நடிகை சொல்லும் காரணம் என்ன?

Priyadharshini R

தமிழிலில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் அட்லி. இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஷாருக் கானை வைத்து ஜவான் படத்தை இயக்கியுள்ளார்.

ஜவான் படத்தில் ஷாருக் கானுடன் நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.மேலும், தீபிகா படுகோன், சஞ்சய் தத் கவுரவ தோற்றத்தில் நடித்திருந்தனர்.

அனிருத் இசையமைத்திருந்த இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகி பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது.

பாக்ஸ் ஆபிஸில் முதல் நான்கு நாட்களில் 500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த ஜவான், 11 நாள் முடிவில் 800 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருந்த ஷாருக்கான் 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. வில்லனாக நடித்த விஜய் சேதுபதி 21 கோடி ரூபாய் வசூலித்ததாக MensXP செய்தி வெளியிட்டுள்ளது.

நயன்தாரா 10 கோடி ரூபாய் வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2 கோடி ரூபாய் பிரியாமணி பெற்றதாக கூறப்படுகிறது.

தீபிகா படுகோன், வழக்கமாக தனது படத்துக்கு ரூ.15 முதல் 30 கோடி வரை வசூலிப்பார். ஆனால் ‘ஜவான்’ படத்தில் கேமியோ ரோலில் நடித்த தீபிகா படுகோன் சம்பளம் எதுவும் வாங்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் ஜவான் படத்தில் நடித்தது குறித்து பேசிய தீபிகா படுகோன், ”ஷாருக் கானுக்காக, அவர் மீது நான் வைத்திருக்கும் அன்பிற்காகத்தான் இப்படத்தில் நடித்தேன்.

இதில் நடித்தற்காகப் பெருமை அடைகிறேன். ஜவான் படத்திற்கு நான் சம்பளம் எதுவும் வாங்கவில்லை” என்றார்

2007-ம் ஆண்டு ஷாருக் கான் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற 'ஓம் சாந்தி ஓம்' படம் மூலமாகத்தான் தீபிகா படுகோன் பாலிவுட்டுக்குள் நுழைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?