விஜய் தொலைக்காட்சியில் பள்ளி பருவ வாழ்க்கையை அழகாக எதார்த்தமாக காண்பித்து ரசிகர்களை குவித்த தொடர் ‘கனா காணும் காலங்கள்’.
தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் இணைய தொடராக ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கிறது. இதற்கு ரசிகர்கள் தங்கள் வரவேற்பை அளித்து வருகின்றனர்.
இதில் சோசியல் மீடியா பிரபலம் தீபிகா அதே தொடரில் கௌதம் கதாபாத்திரத்தில் நடித்து வரும் ராஜ வெற்றியை காதலித்து வருவதாக சமூக வலைதளங்களில் முன்னதாக பல கருத்துகள் பகிரப்பட்டு வந்தது.
இந்நிலையில் நடிகை தீபிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது காதலை தனது ரசிகர்களிடம் தெரிவித்துள்ளார். அதன்படி தனது நண்பரும் சக நடிகருமான ராஜ வெற்றியை திருமணம் செய்யவிருப்பாதாக தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து இருவருக்கும் இன்று திருமணம் நடைபெற்றது. அவர்களின் சங்கீத் நிகழ்வின் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலானது. பலரும் இதற்கு வாழ்த்துகள் தெரிவித்தாலும் நடிகையின் முன்னாள் காதலரான சுகி விஜய்யைப் பற்றி பலர் குறிப்பிட்டிருந்தனர்.
சுகி விஜய், நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் வந்துவிட்டதாகக் கூறி, தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில் ‘நா இன்னும் உயிரோட தான் இருக்கேன்’ என்று பதிவிட்டிருந்தார்.
அதன் பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின் வந்த சுகி விஜய், தீபிகாவின் திருமணம் குறித்து கேள்வி எழுப்பிய பின்தொடர்பவர்களுக்கு பதிலளித்தார்.
அதில் ஒருவர் தீபிகாவின் திருமணத்திற்குப் பிறகு தாடி வளர்ப்பாரா இல்லையா என்று கேட்ட பின்தொடர்பவருக்கு, சுகி விஜய் தனது வாழ்க்கையில் “அப்படிப்பட்ட” சீனே இல்லை என்று கூறினார்.
மற்றொருவரோ தீபிகாவின் வாழ்க்கையில் இருந்து விலகி இருக்குமாறும் அவரது வாழ்க்கையை கெடுக்க வேண்டாம் என்றும் சுகி விஜயிடம் அவரைப் பின்தொடர்பவர் ஒருவர் கேட்டுக் கொண்டார். அதற்கு சரி என்று பதிலளித்தார் சுகி விஜய்.
இன்னொருவர் துரோகம் செய்தவர்கள் எல்லாத்தையும் மறந்துருவாங்க, உங்க வாழ்க்கை எப்படி போகுது என்று கேட்க, அதற்கு சுகி விஜய் ”உண்மைய சொன்னா கல்யாணம் நின்னுரும்” என்றார்.
இந்த இன்ஸ்டாகிராம் போஸ்ட் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust