ஜிகர்தண்டா twitter
சினிமா

ஜிகர்தண்டா 2: அப்டேட் வெளியிட்ட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்

Keerthanaa R

ஜிகர்தண்டா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் படமாக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்மா, லக்ஷ்மி மேனன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ஜிகர்தண்டா. 2014 ஆம் ஆண்டு வெளியான இது காமெடி கலந்த ஒரு ஆக்ஷன் படமாகும்.

இயக்குநராக ஆசைப்படும் கார்த்திக், நல்ல கேங்க்ஸ்டர் படம் எடுக்க நினைத்து மதுரைக்குச் செல்கிறார். மதுரையின் பிரபல ரவுடி அசால்டு சேதுவின் கதையை படமாக்க எண்ணும் கார்த்திக், சேதுவிடம் சிக்கிக்கொள்ள, படம் எடுத்தாரா? இயக்குநர் ஆனாரா? என்பது தான் கதைக்களம்.

ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங் போன்ற சிறந்த தொழில்நுட்பத்திற்காகவும், சிறந்த கதை மற்றும் பாபி சிம்மாவின் மிரட்டலான நடிப்புக்கும் இத்திரைப்படம் பேசப்பட்டது. பாக்ஸ் ஆஃபீசில் நல்ல கலெக்ஷன், விமர்சகர்களிடம் இருந்து பாசிடிவ் ரிவியூக்கள் என, தமிழ் சினிமாவில் வெளியான சிறந்த திரைப்படங்களில் ஒன்று என்றும் இத்திரைப்படம் போற்றப்பட்டது. மேலும் 2014ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகளில், சிறந்த எடிட்டிங் மற்றும் சிறந்த துணை நடிகர் (பாபி சிம்மா) ஆகிய இரு விருதுகளை இத்திரைப்படம் வென்றது.

மொத்தம் 16 வெவ்வேறு விருதுகளை குவித்திருந்தது ஜிகர்தண்டா. இத்திரைப்படம், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் பாபி சிம்மா மீது திரைத்துறையினரின் பார்வையை திருப்பியிருந்தது.

இன்றும் அதன் நுட்பங்களுக்காக பேசப்படும் ஜிகர்தண்டா வெளியாகி 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதன் இரண்டாம் பாகத்தை எடுக்கவுள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். இதை தன் டிவிட்டர் பக்கதில் ஒரு வீடியோ பதிவாக அதிகாரப்பூர்வமாக அவரே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?