எதற்கும் துணிந்தவன்

 

Youtube

சினிமா

சூர்யா எதற்கும் துணிந்தவன் : படத்தை வெளியிட வன்னியர் சங்கம் எதிர்ப்பு, இடதுசாரிகள் ஆதரவு

சூர்யா வன்னியர் மக்களிடம் பொது மன்னிப்பு கேட்கும் வரை படத்தை வெளியிட விடமாட்டோம் என்றும் வன்னியர் சங்கம் தெரிவித்திருக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சூர்யாவின் வீட்டிற்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Antony Ajay R

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியுள்ள எதற்கும் துணிந்தவன் படத்திற்குப் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சூர்யா வன்னியர் மக்களிடம் பொது மன்னிப்பு கேட்கும் வரை படத்தை வெளியிட விடமாட்டோம் என்றும் வன்னியர் சங்கம் தெரிவித்திருக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சூர்யாவின் வீட்டிற்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


கடந்த ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் வன்னியர்களுக்கு எதிராக இருப்பதாகக் கருத்து தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டது. இருப்பினும் வன்னியர் சங்கத்தினர் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தனர். பாமக தலைவர் அன்புமணி சார்பில் ஒரு அறிக்கையும் வெளியிட்டார். அதற்குப் பதிலாக எந்த ஒரு சமுகத்தையும் அவமதிக்கும் நோக்கம் தனக்கும் படக் குழுவினருக்கும் இல்லை என்று சூர்யா ஒரு அறிக்கையில் தெரிவித்தார். இறுதியாகத் திரைப்படத்தின் இயக்குநர் ஞானவேல் தனது அறிக்கையின் மூலம் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவந்தார். அப்போது சூர்யாவின் திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட விடமாட்டோம் என்று வன்னியர் சங்கத்தினர் கூறி வந்தனர்.

வரும் 10ம் தேதி சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் கடலூர் மாவட்டத்தில் படத்தை வெளியிடக் கூடாது என்று வன்னியர் சங்கத்தினரும் பாமகவினரும் கோரிக்கை வைத்துள்ளனர். இதற்காக நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தைத் திரையிடக் கூடாதெனப் பாட்டாளி மக்கள் கட்சியினரும், வன்னியர் சங்கத்தினரும் திரையரங்க உரிமையாளர்களை மிரட்டி வருவதாகத் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

இம்மிரட்டலுக்கு எதிராக குரலெழுப்புமாறு கருத்துரிமையில் நம்பிக்கையுள்ளவர்களை கேட்டுக்கொள்வதாக அந்த சங்கத்தின் மாநிலத் தலைவர் மதுக்கூர் இராமலிங்கம் மற்றும் பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?