Gabrella Sellus Twitter
சினிமா

சன் டிவி விருது மேடையில் கணவர் பெயரைக் குறிப்பிடாத கேப்ரியல்லா - காரணம் இதுதான்

ஆதினி

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலுக்கு சன் குடும்ப விருதுகள் நிகழ்ச்சியில் 13 விருதுகள் கிடைத்துள்ளன. இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் செம பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் கிடைத்ததே இதற்குக் காரணம். சுந்தரி சீரியலுக்கு பல விருதுகள் கிடைத்திருந்தாலும், நாயகி கேப்ரில்லா செம அப்செட்டில் இருக்கிறார்.

சமூகத்தில் நிலவும் நிற பாகுபாடுகள், கருப்பாக இருக்கும் பெண் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றிய தொடர் தான் சுந்தரி. நாயகியாக நடிக்கும் கேப்ரில்லா நடிப்பில் அசத்துகிறார். ஆரம்பத்தில் டிக் டாக் வீடியோக்களில் ஓவர் ஆக்டிங் செய்வது போல் சீரியலில் ஓவர் ஆக்டிங் செய்தாலும், தற்போது அளவான ரியாக்‌ஷன்ஸ் கொடுத்து ரசிக்கும்படி நடிக்கிறார்.

sundari serial Team

சன் குடும்ப விருதுகள் நிகழ்ச்சியில் சுந்தரி சீரியலுக்கு 13 விருதுகள் கிடைத்துள்ளதைக் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட கேபி, ``கொரோனா காலகட்டத்தில் சுந்தரி சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் பல ஏற்றத்தாழ்வுகளை சந்தித்தது. ஆனால் அவற்றை எல்லாம் கடந்து தற்போது ரேட்டிங்கில் முன்னணியில் இருக்கிறோம். இது ரொம்ப பெரிய விஷயம். அதற்கு ஒட்டுமொத்த சீரியல் குழுவும் தான் காரணம். பெருமிதமாக உள்ளது’’ என்று குறிப்பிட்டிருந்தார்.

அதே சமயம் குடும்ப விருதுகள் விழாவில் தன்னை அப்செட் செய்த விஷயத்தையும் குறிப்பிட்டுள்ளார். விருது மேடையில் ஃபேவரைட் நாயகி விருது வாங்கி கேபி, அனைவருக்கும் நன்றி சொல்லி பேசினார். தன் அம்மா, பாட்டி என அனைவருக்கும் நன்றி சொன்னார். ஆனால் தன் கணவர் பெயரை சொல்ல மறந்துவிட்டார். அதனை தன் இன்ஸ்டாவில் வருத்தத்துடன் குறிப்பிட்டிருந்தார். ‘’நான் பதற்றத்தில் உன் பேர சொல்ல மறந்துட்டேன். மன்னிச்சிடு’’ என்று குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு சுந்தரியின் கணவர் “உண்மையாவே அம்மா அம்மாச்சிக்கு தானே நன்றி சொல்லணும், உண்மையை மட்டும் சொல்லு பாப்பா போதும்” என்று குறிப்பிட்டிருக்கிறார். கணவர் தன்னை புரிந்து கொண்டதை பதிவிட்டு, 'பாப்பா...நீ தான் என்னுடைய வாழ் நாட்களுக்கான விருது' என உருகியுள்ளார் கேபி.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?