பாலியல் சுற்றுலா : ஜெர்மனி முதல் தாய்லாந்து வரை - டாப் 10 நாடுகள் Twitter
சினிமா

பாலியல் சுற்றுலா : ஜெர்மனி முதல் தாய்லாந்து வரை - டாப் 10 நாடுகள்

NewsSense Editorial Team

சுற்றுலா என்பது உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி அளிக்க நாம் அனைவரும் மேற்கொள்ளும் நடவடிக்கையாகும்.

அழகான இயற்கை காட்சிகள், ஆபத்தும் கலந்த அட்வெஞ்சர்கள், நவீன நகரங்கள் என எங்கு வேண்டுமானாலும் சுற்றுலா செல்லலாம்.

இவற்றுக்கு மத்தியில் வளர்ந்து வருகிறது பாலியல் சுற்றுலா.

பாலியல் சுற்றுலா என்பது உலகின் பல நாடுகளில் சட்டப்பூர்வமாக தவறாக கருதப்பட்டாலும் சில விதி விலக்கு நாடுகளும் உள்ளன.

நல்ல சுற்றுலாவுடன் உடலுறவையும் அனுபவிக்க நினைக்கும் பணக்காரர்கள் இந்த இடங்களுக்கு படையெடுக்கின்றனர். அப்படிப்பட்ட 10 நாடுகளை தான் இங்கு பார்க்கப்போகிறோம்.

ஜெர்மனி

ஜெர்மனி தெருக்களில் பாலியல் தொழில் என்பது வரைமுறைப்படுத்தப்பட்ட தொழில் நடைபெற்று வருகிறது.

அங்கு முற்றிலும் இது சட்டப்பூர்வமானதே ஆகும்.

இந்த பாலியல் சுற்றுலா இன்று நேற்று அல்ல கி.மு 1200 களில் இருந்தே ஜெர்மனியில் வழக்கத்தில் இருந்து வருகிறது.

டொமினிகன் குடியரசு

டொமினிகன் குடியரசுக்கு பயணம் செய்பவர்கள் பல சட்டப்பூர்வமான பாலியல் தொழில் செய்யும் விடுதிகளைப் பார்க்க முடியும். இவற்றில் பல பார்லர்களுடன் இணைந்தே இருக்கும்.

தலைநகர் சன்டோ டொமிங்கோ மற்றும் பிர்டோ ப்ளாடா போன்ற நகரங்களில் பாலியல் தொழிலாளர்கள் சாதாரணமாக நடமாடுகின்றனர் எங்கிறது செக்கான் க்ரோனிகல் இதழ்.

அதிக பாலியல் தொழிலாளர்கள் இருக்கும் நாடுகளில் 4வது பெரிய நாடாக இருக்கிறது டொமினிகன் குடியரசு.

ஸ்பெயின்

ஸ்பெயினின் புகழ்பெற்ற பார்டி பகுதிகளாக மாற்றிட், ஐபிசா மற்றும் பார்சிலோனா ஆகியவை பல கண்கவரும் க்ளப்களைக் கொண்டுள்ளன.

இந்த க்ளப்கள் நல்ல பார்கள் மட்டுமல்ல பாலியல் சுற்றுலாவுக்கான தளங்களும் கூட.

இவை தவிர ஸ்பெயினில் சிவப்பு விளக்கு பகுதிகளும் இருக்கின்றன.

மலேசியா

மலேசியாவில் பாலியல் தொழில் சட்டப்பூர்வமானது என்றாலும் பினாங்கு, கோலாலம்பூர் மற்றும் ஈப்போ போன்ற இடங்களில் பிரபலமாக இருக்கிறது.

மலேசியாவில் பெரும்பாலான பாலியல் தொழிலாளர்கள் சீன உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்டவர்கள்.

கென்யா

ஆப்ரிக்க கண்டத்தின் மிகப் பெரிய பாலியல் சுற்றுலா தளமாக விளங்குகிறது கென்யா.

இங்கு அதிகமாக பாலியல் தொடர்பான நோய்கள் பரவினாலும் ஹெச்.ஐ.வி அபாயம் இருந்தாலும் அதிகமாக பாலியல் தொழிலும் நடக்கிறது.

முக்கியமாக வயதான பெண்மணிகள் ஆண்களை விலைக் கொடுத்து வாங்க இங்கு வருவதாக டெக்கான் க்ரோனிக்கல் அறிக்கை குறிப்பிடுகிறது.

மேலும் சிறுவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.

நெதர்லாந்து

Red light area

சர்வதேச பாலியல் சுற்றுலாவை அனுபவிக்க விரும்புபவர்கள் நெதர்லாந்தை தேர்ந்தெடுக்கின்றனர். இங்கு மிகப் பெரிய சிகப்பு விளக்கு பகுதிகள் இருக்கின்றன.

பிலிப்பைன்ஸ்

அதிக அளவில் பாலியல் தொழிலில் ஈடுபடும் நபர்கள் இங்கு தான் இருக்கின்றனர்.

இங்கு இரண்டாம் உலகப் போர் காலத்தில் நிறுவப்பட்ட கேர்ளி பார்கள் தான் இந்த நாட்டின் மீது செக்ஸ் முத்திரை குத்தப்பட முக்கிய காரணம் என்கின்றனர்.

கேர்ளி என்பது அறை குறையாக ஆடை உடுத்திய பெண்கள் ஆடும் பார்களைக் குறிப்பதாகும்.

பணக்கார நாடுகளில் இருந்து வரும் பாலியல் சுற்றுலாப்பயணிகளால் உருவான குழந்தைகளை அவர்கள் திரும்பிக் கூட பார்ப்பது கிடையாது. தந்தையை அறியாத அல்லது என்றோ சுற்றுலாப் பயணியாக வந்த தந்தையைக் கொண்ட குழந்தைகளின் தலைமுறை அங்கு உருவாகி ஏழ்மையில் வாடிவருகின்றது.

பிரேசில்

பாலியல் தொழில் சட்டப்பூர்வமான பிரேசில் நகரங்களில் டஜன் கணக்கில் பாலியல் தொழில் செய்யும் விடுதிகள் இருக்கின்றன.

கொலம்பியா

கொலம்பிய பெண்கள் தான் உலகிலேயே அழகான பெண்கள் என்ற கருத்து நிலவி வந்தது தான் இந்த நாட்டில் பாலியல் தொழில் பிரபலமாக காரணமாம்.

இங்கு பாலியல் தொழில் சட்டப்பூர்வமானது என்றாலும் குழந்தைகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தாமல் காக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கிறது.

தாய்லாந்து

வியட்நாம் போரின் விளைவாக ஏற்பட்ட வறுமையும் மற்ற காரணிகளும் தான் தாய்லாந்தில் பாலியல் தொழில் வளரக் காரணமாக இருந்தது.

இங்கு 2 முதல் 10 லட்சம் பேர் பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து மட்டுமல்லாமல் பெரும்பாலான நாடுகளில் ஏழ்மையே பாலியல் தொழிலுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?