Ilayaraaja Twitter
சினிமா

இளையராஜா : எல்லாருக்குமான ஒரு கலைஞன்

Keerthanaa R
Ilayaraaja-AR Rahman

மனிதனுக்கு ஏற்படும் மூட் ஸ்விங்க்ஸிற்கு ஏற்றார் போல் இவரிடம் ஒரு பாடலாவது இருக்கும். அதே சமயத்தில் இந்த நேரத்தில் தான் கேட்க முடியும் என்ற வரையறைக்குள் அடங்காத இசையாக அமைந்தது இளையராஜாவின் ட்யூன்கள். பொதுவாகவே, திரைப்படப் பாடல்கள் ஒரு குறிப்பிட்ட ராகத்தில் தான் அமைந்திருக்கும் என்ற நிபந்தனை எப்போதும் இருந்தது கிடையாது.


ஆனால், பாடல்களை, அதன் நுட்பங்களை அறிந்தவர்கள் மட்டுமே ரசித்து, லயித்து வந்த காலகட்டத்தில், பாமரனுக்கும் போய் சேரவேண்டும் என்ற நோக்கத்தோடு, பாரம்பரிய நாட்டுபுற பாடல்களை இசையாக்கலானார். நாட்டுப்புறப் பாடல்களின் சிறப்பு, அதன் எளிமையான பாஷை. சிந்து பைரவியில் "கவல ஏதுமில்ல ரசிக்கும் மேட்டுக்குடி... சேரிக்கும் சேரவேணும் அதுக்கும் பாட்டுப்படி" என்ற வரிகள், இளையராஜாவுக்கு நன்கு பொருந்தும். அதற்காக மெல்லிசைகளையோ உலக இசையையோ இவர் விட்டுவிடவில்லை.

Sindhu Bhairavi

அக்னி நட்சத்திரத்தில் "ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா" என்ற பாடலில், பெர்கஸ்ஸன் (percussion) மட்டுமே பயன்படுத்தியது ஒரு புதிய முயற்சியாக இருந்தது. தளபதி படத்தில், ஒரு சின்ன பிஜிஎம் ஆக ஒலிக்கப்படும் புத்தம் புது பூ பூத்ததோ என்ற பாடல், இவரது உலகளாவிய இசை ஞானத்திற்கு, மற்றுமொரு சான்று. பாடலில், வயலின், சாக்ஸாஃபோன் ஒரு பக்கம் ஒலித்துக்கொண்டிருக்க, பெர்கஸ்ஸனின் தாளங்கள் நம்மை இருக்கிபிடித்து உட்காரவைக்கும். ஆனால், இசையின் அடிநாதம், நாம் நன்கு கேட்டுப்பழகிய நம் நாட்டு இசையாகவே இருக்கும். இதில் ராஜா பயன்படுத்திய எந்த இசைக்கருவியின் நாதமும், தனித்தனியே ஒலிக்காது என்பது தான், இவரது மேஜிக்!


பல நேரங்களில், நாம் கேட்கும் பாடல்கள் எங்கோ கேட்டதுபோல இருக்கிறதே என்ற சந்தேகம், ராஜாவின் பாடல்களைக் கேட்கும்போது தோன்றாதது ஒரு மிஸ்டரி தான். இவர் ஒரு படத்தில் பயன்படுத்திய அதே பாடலை, வேறு மொழிப் பாடல்களுக்குப் பயன்படுத்தியுள்ளார் என்றாலும், பெரும்பாலும் இவரது பாடல்களில் வரும் ப்ரீலூட்கள் வைத்து அது எந்த பாடல் என்று கண்டுபிடித்துவிடலாம். "சுந்தரி கண்ணால் ஒரு சேதி", கண்மணியே காதல் என்பது கற்பனையோ", "எனக்குப் பிடித்த பாடல்", சினோ ரீட்டா I love you" என்று அடுக்கிக்கொண்டு போகலாம்!

Jhonny

இவரது ப்ரீலூடுகள் இவ்வாறு ஈர்க்க, ராஜாவின் பாடல்களில் ஒலிக்கும் இன்டெர்லூடுகள் இன்றும் பலரின் ரிங்க்டோங்கள். "பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்" , "ராமனின் மோகனம்", "புன்னகை மன்னன்" "ராஜ ராஜ சோழன் நான்", "தளபதி" இன்டெர்லூட்களுக்கு மயங்காத ஆளில்லை.


"இதைத் தான் செய்யப்போகிறோம் என்ற தீர்மானத்தோடு ஒரு செயலில் ஈடுபடுகையில், அதன் முடிவு வந்துவிடுகிறது. பிறகு அதில் தேட, கற்றுக்கொள்ள எதுவும் மிஞ்சாது என்கிறார் இசைஞானி.

நாம் செய்யப்போகும் விஷயத்தைப் பற்றிச் சரியான புரிதல் இல்லாமல் அதை செய்வதில் முழுமையடைய முடியாது என்பதற்கு, இளையராஜா சான்று. சிறுவயதில் தன் சகோதரருடன் பயணித்த ராஜா, கிட்டார், கீபோர்ட், ஆர்கானிஸ்ட் என்று தன் திறனை பன்முகப்படுத்திக்கொண்டார். இதன் விளைவாகவே நாம் இன்றுக்கொண்டாடும் பின்னணி பாடகர்களை அடையாளம் கண்டு, அவர்களின் கரியர்களில் ஒரு முக்கிய அங்கம் வகித்துள்ளார்.

Ilayaraaja

ஒரு முறை "சம்பத்திகே சவால்" என்ற கன்னட படத்தில், ஜி கே வெங்கடேஷுடன் பணியாற்றியபோது, பி பி ஸ்ரீநிவாஸுக்கு உடல் நலம் குறைய, அவர் பாடவிருந்த பாடலை கன்னட நடிகர் ராஜ்குமாரை வைத்து ரெகார்ட் செய்துள்ளனர். அவரை ஜிகேவி கு சஜ்ஜஸ்ட் செய்தது ராஜா தான்!. ராஜ்குமார் பின்னாளில் எவ்வளவு பெரிய தவிர்க்கமுடியாத பாடகரானார் என்பது உலகம் அறிந்ததே.


இசைமேதை, மேஸ்டிரோ என்றழைக்க, இவர் ஒரு அற்புதமான பாடலாசிரியரும் கூட. "நிலா அது வானத்து மேலே", "என்ன சமையலோ", "இசையில் தொடங்குதம்மா", விருமாண்டியில் "சண்டியரே சண்டியரே", இதயக்கோவிலில் "இதயம் ஒரு கோவில்", நான் கடவுளில் "பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்" இவரது கைவண்ணங்கள்.

1000 படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கும் இளையராஜா, கடைசியாக இசையமைத்தது, பிரபல ஆங்கில வெப் சீரீஸான Stranger Things.

இவரை பற்றி கூற இந்த ஒரு பக்கம் போதாது என்றாலும், இன்னும் வருடங்கள் கடந்தாலும், இசையுலகில் இவரின்றி ஒரு துரும்பு கூட அசையாது என்பதற்கு இது சான்று.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?