Ilayaraja - Gangai Amaran

 

NewsSense

சினிமா

இளையராஜா, கங்கை அமரன் சந்திப்பு - 13 வருட பிரிவு முடிவுக்கு வந்தது

இளையராஜா குடும்பத்தில் மொத்தம் நான்கு சகோகாதரர்கள். மூத்தவர் பாவலர் வரதராஜன். இவர் ஒரு இடதுசாரி. ஊர் ஊராகச் சென்று தனது பாடல்களின் வழியாக கம்யூனிஸ்ட் கொள்கைகளை பரப்பியவர். தேர்தல் பிரச்சாரம் செய்தவர்.

NewsSense Editorial Team

பல வருட பிரிவுக்குப் பிறகு நேற்று இளையராஜாவும், கங்கை அமரனும் சந்தித்துக் கொண்டனர். அது இருவீட்டாருக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

நல்லதொரு குடும்பம்

இளையராஜா குடும்பத்தில் மொத்தம் நான்கு சகோகாதரர்கள். மூத்தவர் பாவலர் வரதராஜன். இவர் ஒரு இடதுசாரி.

ஊர் ஊராகச் சென்று தனது பாடல்களின் வழியாக கம்யூனிஸ்ட் கொள்கைகளை பரப்பியவர். தேர்தல் பிரச்சாரம் செய்தவர்.

அவர் காங்கிரஸுக்கு எதிராக பாடிய பாடலின் வடிவம்தான் இளையராஜா இசையமைத்த ஒத்த ரூபாயும் தாரேன் பாடல். அவருக்கு அடுத்து பாஸ்கர். அடுத்து இளையராஜா, கடைசி தம்பி கங்கை அமரன்.

Ilaiyaraja - Gangai Amaran

பிரிவு

கங்கைஅமரனுக்கும் இளையராஜாவுக்கும் சின்னராமசாமி பெரியராமசாமி பட தயாரிப்பின் போது பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போதிலிருந்தே இவர்கள் இருவரும் பேசிக்கொள்வது இல்லை என்றும், எந்த குடும்ப நிகழ்ச்சியிலும் சந்தித்துக் கொண்டதும் இல்லை என்றும் தகவல்கள் வெளியானது.

இவர்களின் வாரிசுகள் பேசிக் கொண்டிருந்தாலும் இவர்கள் இருவரும் பேசிக் கொள்ளாமல், சந்தித்துக் கொள்ளாமல் இருந்து வந்தனர். குடும்ப நிகழ்வுகள், விழாக்களில் இருவரும் கலந்து கொண்டாலும் ஒருவரை ஒருவர் சந்திப்பதை தவிர்த்தார்கள். இளையராஜா குறித்து பல இடங்களில் கங்கை அமரன் கடுமையாக விமர்சித்தும் பேசி இருக்கிறார்.

மீண்டும் இணைந்த குடும்பம்

இந்த நிலையில் பல ஆண்டுகளுக்கு பிறகு இளையராஜாவும், கங்கை அமரனும் இளையராஜாவின் ரிக்கார்டிங் ஸ்மடூடியோவில் சந்தித்து பேசியிருக்கிறார்கள். இந்த படத்தை கங்கை அமரனின் மகன் பிரேம்ஜி அமரன் சமூகவலைதளத்தில் வெளியிட்டு, இறை அருளுக்கு நன்றி. உறவுகள் தொடர்கதை என்று குறிப்பிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்.

ஒரு புதிய படத்தில் இருவரும் இணைந்து பணியாற்ற இருப்பதாக கூறப்படுகிறது .இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கங்கை அமரம் பேசும் போது, "அண்ணன் அழைப்பதாக போனில் சொன்னார்கள். நான் இவ்வளவு காலம் அதற்குத்தான் காத்திருந்தேன். உடனே போய் சந்தித்தேன். ஒன்றரை மணிநேரம் பேசிக்கொண்டு இருந்தேன். எந்தச் சண்டை சச்சரவுகளும் இல்லாமல் அருமையாகப் பேசிக்கொண்டு இருந்தார். 13 வருடங்களாகப் பேசாமல் இருந்தது பெரும் துயரம். இனிமேல் அது போல் நேராது. எனக்கு இப்போது சந்தோஷமாக இருக்கிறது,” என கூறி உள்ளார்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?