கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் ‘இதயத்தைத் திருடாதே’ தொடருக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. குறிப்பாக சிவா ( நவீன்) - சஹானா (ஹிமா பிந்து) ஜோடிக்கு இன்ஸ்டாவில் பல ஃபேன் பக்கங்கள் உள்ளன.
ரீல் ஜோடியான நவீன் - ஹிமா நிஜத்திலும் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக கிசுகிசுக்கள் வெளியாகின. இந்நிலையில் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நவீன், தன் ரியல் காதலியை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். அவர் வேறு யாருமில்லை, சன் டிவியின் பிரபல செய்தி வாசிப்பாளர் கண்மணி சேகர் தான்!
அழகான தமிழ் உச்சரிப்பு, கண்ணை உறுத்தாத நிறத்தில் ஆடை அணிகலன்கள் என கண்மணி தனித்துவம் வாய்ந்தவர். செய்தி வாசிப்பாளராக இருந்து சின்னத்திரைக்கும், வெள்ளித்திரைக்கும் செல்வது வழக்கமாகிவிட்டது. அதற்கான அத்தனை தகுதியும் இருந்தும், வாய்ப்புகள் வந்தும், செய்தி வாசிப்பாளராக தன் பணியைத் தொடர்கிறார் கண்மணி. இன்ஸ்டாவில் அவ்வபோது போட்டோஷூட் செய்து புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்
நவீன் - கண்மணி
நவீன் - கண்மணி
மற்றொரு புறம் நவீன், இதயத்தைத் திருடாதே தொடரின் இரண்டாவது பாகத்தில் பிஸியாக நடித்து வருகிறார். முதல் பாகத்தை விடவும் இரண்டாவது பாகம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. காரணம் சுட்டி பெண் ஆழியாவின் எண்ட்ரிதான். இந்த பாகத்தில் ரொமான்ஸ் சற்று அதிகம். அண்மையில் வெளியான ப்ரோமோவில், சிவா கோபமாக இருக்கும் சஹானாவைச் சாப்பிடச் சொல்கிறார். சஹானா மறுக்கவும், உடனே அவரின் கைகளைக் கட்டிப்போட்டு, கன்னத்தில் முத்தமிட்டு, சாப்பிடவில்லை என்றால் முத்தம் கொடுத்துக் கொண்டே இருப்பேன் என்று மிரட்டுகிறார். உடனே சஹானாவும் சாப்பிடுகிறேன் என்கிறார். இந்த ப்ரோமோ வெளியானதும் சிவா-சஹானா ஜோடியின் அதி தீவிர ரசிகர்கள் சிலாகித்துப் பல மீம்ஸ்களும் ரீல்ஸ்- களையும் பதிவிட்டு வந்தனர். இந்த சம்பவம் நவீனின் பர்சனல் வாழ்க்கையில் புயல் உருவாக்கிவிட்டது. அதன் விளைவாக நேற்று திடீரென தன் நிஜ காதலி யார் என்பதைப் போட்டு உடைத்துவிட்டார் நவீன்.
நவீன்கண்மணி
``ஆதி முதல் அந்தம் வரை அத்தனையும் நீயாகிப்போனால்..’’ என்று பதிவிட்டு கண்மணியையும் டேக் செய்து பகிர்ந்திருக்கிறார். நிறையப் பேர் வாழ்த்துக்களைப் பதிவிட்டாலும், பலர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். ``நீங்களும் சஹானாவும் தான் made for each other என்று புலம்பி வருகின்றனர். திரையில் தோன்றும் ஜோடிகளை நிஜ ஜோடிகளாகப் பாவித்து ஃபேன் பக்கங்கள் தொடங்கும் வழக்கம் என்று தான் மாறுமோ தெரியவில்லை. நடிகர்களுக்கும் சொந்த வாழ்க்கை இருக்கும் என்பதை ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அடுத்த சீரியலில் வேறு ஒரு நடிகையுடன் ஜோடி சேர்ந்தால் அவரையும் திருமணம் செய்யச் சொல்வார்கள் போலும்!