Mk Stalin  Twitter
சினிமா

kalaignar 100 live : நவீன திரைப்பட நகரம் அமைக்கப்படும் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

பூந்தமல்லியில் ₹540 கோடி மதிப்பில் நவீன திரைப்பட நகரம் அமைக்கப்பட உள்ளதாக கலைஞர் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Priyadharshini R

தமிழ் திரையுலகம் முன்னெடுத்து நடத்தும் 'கலைஞர் 100' விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பு

டிரெண்ட் செட் செய்தவர் கலைஞர்

"கலையை அரசியலாகவும், அரசியலை கலையாகவும் மாற்றியவர் கலைஞர்.

சினிமாவை சக்திவாய்ந்த ஆயுதமாக மாற்றி சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் எனும் டிரெண்ட் செட் செய்தவர் கலைஞர்" - நடிகர் சூர்யா

தமிழ் திரையுலகம் முன்னெடுத்துள்ள ‘கலைஞர் 100’ விழாவில் பங்கேற்க வருகை தந்த நடிகை நயன்தாரா

"கலைஞரின் மேடையில் நான் எப்போதும் ஒரு ஓரம்தான்" -‘கலைஞர் 100' விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேச்சு

"விஜயகாந்த் இறுதி ஊர்வலத்தை சிறப்பாக நடத்திக் கொடுத்த அரசியல் பண்பிற்கு நன்றி" - கமல்ஹாசன்

"கலைஞரைப் போன்று ஹேர் ஸ்டைல் வேண்டும் என கேட்பேன்" -நடிகர் கமல்ஹாசன்

பூந்தமல்லியில் ₹540 கோடி மதிப்பில் நவீன திரைப்பட நகரம் அமைக்கப்பட உள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

"எப்பவுமே ஒருத்தருக்கு எழுத்தாற்றல் இருந்தா பேச்சாற்றல் இருக்காது. ஆனா, கலைஞருக்கு இது ரெண்டுமே இருந்துச்சு." - 'கலைஞர் 100’ விழாவில் ரஜினிகாந்த்

நன்றி கூடவே வந்தேன் - முக ஸ்டாலின்

கலைஞர் நூற்றாண்டு விழாவை கலையுலகம் கொண்டாடியதற்கு திமுக தலைவர் என்ற முறையில், தமிழ்நாடு முதலமைச்சர் என்ற முறையில், அவரது மகன் என்ற முறையில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் - முதலமைச்சர் முக ஸ்டாலின் பேச்சு

கலைஞர் 100 விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு

"வழக்கமாக கலைஞர் ஒரு நடிகருடன் படம் பார்ப்பார். அது தேர்தல் நேரம். அந்த நடிகர் ஓட்டு போட்டுவிட்டு வெளியே வந்தபோது பத்திரிக்கையாளர்கள் யாருக்கு ஓட்டு போட்டீர்கள் என்று கேட்க அவர் இரட்டை இலை என்று சொல்லிவிட்டார் அது டிரெண்டாகிவிட்டது.

அன்று மாலை படம் பார்க்க போக வேண்டும், ஆனால் எப்படி போவது என்று தெரியாமல் குளிர் காய்ச்சல் என்று கூறிவிட்டார். ஆனால் அவர் வரவேண்டும் என்று கலைஞர் கூறிவிட்டார். தியேட்டருக்கு சென்றபோது வாங்க குளிர் காய்ச்சல்னு சொன்னிங்களாமே சூரியன் பக்கத்துல உட்காருங்க என்றார் கலைஞர்.

அந்த நடிகர் நான்தான்"

- கலைஞர் 100 விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?