பிக்பாஸ் சீசன் 5-ன் இறுதி போட்டி நேற்று மிக் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இதில் ராஜு முதல் பரிசையும் விஜய் டிவி பிரியங்கா இரண்டாவது பரிசையும் வென்றனர்.
பிக் பாஸ் 5 சீசன்களின் தொடர் வெற்றியைத் தொடர்ந்து புதிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இதுவரை 5 சீசன்களில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் 13 பேர் பங்கேற்கும் பிக்பாஸ் அல்டிமேட் இந்த மாதம் 30ம் தேதி முதல் நடைபெறும் என்பது தான் அந்த புதிய அப்டேட்.
கஅக்
இந்த பிக்பாஸ் அல்டிமேட்டின் சிறப்பான அம்சம் என்னவென்றால் இது 24 மணி நேரமும் தொடர்ந்து ஒளிபரப்பாகிக்கொண்டே இருக்கும் என்பது தான். இதன் மூலம் கடந்த ஐந்து சீசன்களில் தங்களை நிரூபிக்கத் தவறிய போட்டியாளர்கள் தங்களை முழுமையாக வெளிப்படுத்தத் தயாராகியுள்ளனர். இதனைத் தொகுத்து வழங்குவதன் மூலம் நடிகர் கமலஹாசன் முதன்முதலாக ஓடிடி-யில் அறிமுகமாகிறார். இந்த பிரத்யேகமான நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதைக் குறித்து கமலஹாசன் கூறியதாவது , “பிக்பாஸ் அல்டிமேட்டின் முதல் OTT பதிப்பு டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் உள்ளது. OTT பதிப்பையும் தொகுத்து வழங்குவதன் மூலம் தொடர்ந்து உங்களுடன் தொடர்பில் இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த புதிய வடிவத்தை இப்போது 24/7 நேரமும் காணலாம். இந்த புதிய அனுபவம் உங்களுக்கு புத்துணர்ச்சியூட்டுவதாகவும் சுவாரஸ்யமானதாகும் இருக்குமென நான் 100% நம்பிக்கை கொண்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக இதில், வனிதா விஜயகுமார், ஜூலி, தர்ஷன், ஓவியா, அனிதா சம்பத் ஆகியோர் கலந்துகொள்ள இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.