லோகேஷ் கனகராஜ் மற்றும் கமல்ஹாசன் Twitter
சினிமா

விக்ரம் : ரசிகர்களுக்கு நன்றி சொன்ன லோகேஷ், வாழ்த்திய கமல் - வைரலாகும் எமோஷனல் ட்வீட்ஸ்

Keerthanaa R

மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய வெற்றிப்படங்களுக்கு பிறகு, லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் திரைப்படம் கடந்த ஜூன் 3 ஆம் ததி வெளியானது. முதல் நாளில் மட்டும் 20 கோடிக்கு மேல் வசூல் செய்ய, ஹவுஸ்ஃபுல்லாக படம் வெற்றிநடைப்போட்டு வருகிறது.

கமல்ஹாசன், பகத் ஃபாசில், விஜய் சேதுபதி, நரேன், காயத்ரி, காளிதாஸ் ஜெயராம் என டாப் ஸ்டார்களை களமிறக்கிய லோகேஷிடம், ரசிகர் பட்டாளம் மட்டுமல்லாமல், மொத்த தமிழ் திரையுலகமே இந்த படத்தைப் பெரிதும் எதிர்நோக்கிக் காத்திருந்தது.

1986 -ல் வெளிவந்த விக்ரம் திரைப்படத்தின் ஒரு சீக்வெல் ஆக இது இருக்கும் என்று பல ஃபேன் தியரிகள் புணையப்பட்டன. காரணம், பழைய விக்ரமிலும் கமல் தான் ஹீரோ.

Vikram 1986

3 கொலையாளிகளுக்காக, சுகிர்தராஜா என்பவன் இந்தியாவின் நியூக்ளியார் மிஸ்ஸைல் ஒன்றை கடத்திவைத்து மிரட்ட, அதை மீட்பதற்காகச் செல்கிறார் ஏஜென்ட் ஏ கே விக்ரம். இந்த படத்தின் ஒரு தொடர்ச்சியாகத் தான் புதிய விக்ரம் அமைந்திருக்கும் என பலரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் டிரெய்லர் வெளிவந்த பிறகு, ஃபேன் தியரிக்கள், லோகேஷின் முந்தய படங்களான கைதி, மாஸ்டர் பக்கம் திரும்பியது.


அதற்கேற்றார் போல் லோகேஷும் விக்ரம் வெளியாவதற்கு ஒரு நாள் முன், ஒரு முறை எல்லோரும் கைதி படத்தை பார்த்துவிட்டு விக்ரமின் உலகிற்குள் வாருங்கள் என்று சொல்ல, படத்திற்கான ஹைப் ஏகபோகமாக எகிறியது.

Vikram Stills

படம் வெளியானது தான் மிச்சம். நான்கு வருடங்களுக்குப் பிறகு திரையில் தோன்றும் உலகநாயகன், முக்கிய கதாபாத்திரங்களில் உச்ச நட்சத்திரங்கள் என கெத்தாக களமிறங்கிய படம் முதல் நாளிலேயே தமிழ்நாட்டில் 20 கோடி வசூல் செய்தது.

படத்திற்குக் கிடைத்த வரவேற்பில் திக்குமுக்காடி போயுள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். தான் பார்த்து ரசித்து வளர்ந்த நாயகனுக்கு, Fan boy கொடுக்கும் ஒரு ட்ரிப்யூட்டாக இந்த படம் இருக்கும் என கூறி வந்த நிலையில், படம் மாபெரும் வெற்றியை அடையவே, ட்விட்டரில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து நெகிழ்ச்சி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.


"நான் இதுவரை இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டதில்லை. விக்ரம் படத்திற்கும் எனக்கும் நீங்கள் கொடுத்த அங்கீகாரம் பெரியது. நீங்கள் ஏற்றுக்கொண்டதற்கு நன்றி! இந்த அன்பை எப்படி திருப்பி கொடுக்கப் போகிறேன் என்று தெரியவில்லை. கமல்ஹாசனுக்கு எப்போதும் கடமைப்பட்டுள்ளேன். எல்லாருக்கும் நன்றி" என்று நெகிழ்ச்சி பதிவிட்டார்.

இதற்கு கமல்ஹாசன், லோகேஷிடம் சொன்ன பதில் இன்னும் அதிக லைக்குகளை பெற்றுவருகிறது. "ரசிகர்களின் இந்த அன்பிற்கு நீங்கள் திரும்ப கொடுக்க ஒரே வழி, எப்போதும் மெத்தனமாக மாறிவிடக்கூடாது. நேர்மையான, கடின உழைப்பை எப்போதும் பின்பற்றுங்கள். அதை தான் அவர்களும் மதிப்பர், விரும்புவர். உங்கள் அடுத்தடுத்த முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள். RKFI, இன்றுபோல் என்றும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். Rock on" என்று பதிவிட்டிருந்தார்.


இந்த பரஸ்பர அன்பு பரிமாற்றம் ட்விட்டர் பயனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?