Chethana Raj Twitter
சினிமா

Bengaluru: கன்னட நடிகை மரணம்- பிளாஸ்டிக் சர்ஜரியால் விபரீதம்

Keerthanaa R

சின்னதிரையிலும், வெள்ளித்திரையிலும் பிரபலமான நடிகை சேத்தனா ராஜின் மரணம் கன்னட ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கீதா, தொரசேனா போன்ற தொடர்களில் நடித்தவர் நடிகை சேத்தனா ராஜ், 21. இவர் பெங்களூருவில் ஷெட்டி காஸ்மெடிக் சர்ஜெரி என்ற ஒரு தனியார் மருத்துவமனையில் ஃபேட் சர்ஜரிக்காக (fat surgery) அனுமதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அறுவை சிகிச்சை முடிந்து சில மணி நேரங்களில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chethana Raj

அறுவை சிகிச்சை முடிந்து மாலை திடீரென நுரையீரலில் தண்ணீர் சேர்ந்ததால், உடல நலக்குறைப்பாடு ஏற்பட்டு இவர் இறந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிகிச்சையின் போதே நுரையீரலில் தண்ணீர் கோர்த்து மோசமான நிலையிலிருந்ததும் தெரியவந்துள்ளது.


மேலும், இந்த அறுவை சிகிச்சையை பற்றி இவர் தன் பெற்றோரிடம் தெரிவிக்கவில்லை என்றும் ஒரு தரப்பினர் கூறிவருகின்றனர். எனினும், மருத்துவர்களின் அலட்சியப்போக்கினாலும், முறையான உபகரணங்கள் பயன்படுத்தாததினாலும் தங்கள் மகளின் உயிர் பிரிந்ததாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

Chethana Raj

மருத்துவர் ஷெட்டி இதுவரை இந்த சம்பவம் குறித்து எந்தவித விளக்கமோ, பதில்களோ அளிக்கவில்லை. உடற்கூறாய்வு முடிவுகள் வந்த பிறகு தங்கள் கருத்துகளை தெரிவிப்பதாக மருத்துவ வட்டாரங்கள் கூறியுள்ளன.


மருத்துவமனை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்னும் சற்று நேரத்தில் சேத்தனாவின் உடல் ராமய்யா மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?