Kantara
Kantara Twitter
சினிமா

Kantara : காட்சிகள் திருடப்பட்டதா?காந்தாரா படக்குழு மீது புகார்

Priyadharshini R

காந்தாரா படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலின் காட்சிகள் கேரளாவில் உள்ள தாய்க்குடம் இசைக் குழுவினரின் இசை ஆல்பத்தில் இருந்து எடுக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது

ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் தற்போது ஹிட்டான கன்னட படம் தான் காந்தாரா. தற்போது தமிழ் தெலுங்கு இந்தியில் டப் செய்யப்பட்டு வெற்றிகரமாக திரையில் ஓடிக் கொண்டிருக்கின்றது.

இந்த படத்தில் வந்த அனைத்து பாடல்களும் செம ஹிட் ஆகியுள்ளன.

இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள வாராக ரூபம் என்ற பாடல் தங்களுடைய நவரசம் என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டதாக பிரபல தாய்க்குடம் பிரிட்ஜ் என்ற மலையாள இசைக் குழு புகார் அளித்துள்ளது

மேலும் இந்த பாடல் குறித்து சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அந்த இசைக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த புகார் குறித்து விளக்கம் கொடுத்துள்ள காந்தாரா இசையமைப்பாளர் அஜனீஷ் இரண்டு பாடல்களும் ஒரே ராகத்தில் இருப்பதால் இசை ஒன்று போல இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையில் காந்தாரா படத்தை நடிகர் ரஜினிகாந்த் புகழ்ந்துள்ளார்.

இந்திய சினிமாவில் இந்த தலைசிறந்த படைப்பைக் கொடுத்த ஒட்டுமொத்த நடிகர்களுக்கும், குழுவினருக்கும் வாழ்த்துகள் என்று கூறிய ரஜினிகாந்துக்கு இயக்குனர் ரிஷப் ஷெட்டி பதில் ட்வீட் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

2500 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் திசை மாறிய கங்கை நதி - ஆய்வு சொல்வதென்ன?

Nikhila vimal: அழகிய லைலா நிகிலா விமலின் ரீசண்ட் புகைப்படங்கள்!

3.5 ஆண்டுகள் வரை கர்ப்ப காலம் கொள்ளும் விலங்குகள் பற்றி தெரியுமா?

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?