காத்ரீனா கைஃப் நடனம் - வைரலாகும் ஃபோட்டோ!

 

Newssense

சினிமா

காத்ரீனா கைஃப் நடனம் - வைரலாகும் ஃபோட்டோ!

தற்போது இருவரும் சேர்ந்து மும்பை பாந்த்ரா கோர்ட்டில் தங்களது திருமணத்தை முறைப்படி பதிவு செய்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். திருமணத்தை பதிவு செய்து கொண்ட பிறகு இரண்டு பேரின் குடும்பமும் பிரபல ரெஸ்டாரண்ட் ஒன்றுக்கு சென்று இரவு விருந்து சாப்பிட்டனர்.

NewsSense Editorial Team

நடிகை கத்ரீனா கைஃபிற்கும் நடிகர் விக்கி கெளஷலுக்கும் இடையே கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ராஜஸ்தானில் ஆடம்பரமாக திருமணம் நடந்தது. இத்திருமணம் நடப்பதற்கு முன்பே அதனை பதிவு செய்ய இருவரும் திட்டமிட்டு இருந்தனர். விக்கியின் வீட்டில் இதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டது. கத்ரீனா கைஃப்பும் விக்கியின் இல்லத்திற்கு வந்திருந்தார். ஆனால் பதிவு செய்யவில்லை. திருமணம் முடிந்தவுடன் இருவரும் படப்பிடிப்புகளில் மூழ்கிவிட்டனர். இதனால் அவர்களுக்கு தங்களது திருமணத்தை பதிவு செய்து கொள்ள நேரம் கிடைக்கவில்லை.

திருமண பதிவு

தற்போது இருவரும் சேர்ந்து மும்பை பாந்த்ரா கோர்ட்டில் தங்களது திருமணத்தை முறைப்படி பதிவு செய்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். திருமணத்தை பதிவு செய்து கொண்ட பிறகு இரண்டு பேரின் குடும்பமும் பிரபல ரெஸ்டாரண்ட் ஒன்றுக்கு சென்று இரவு விருந்து சாப்பிட்டனர். குடும்பத்தோடு ஓட்டலில் சென்று சென்று இரவு விருந்து சாப்பிட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. திருமணம் முடிந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் தற்போதுதான் இருவரும் சட்டப்படி கணவன் மனைவியாக மாறியிருக்கின்றனர்.

வாழ்த்து

சட்டப்பூர்வமாக தம்பதிகளாகி வாழ்க்கையை தொடங்கி இருக்கும் பாலிவுட் தம்பதிக்கு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். புதுமணத்தம்பதி கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது மனைவி அனுஷ்காவுடன் தங்கி இருக்கும் கட்டிடத்தில் குடியேறி வசித்து வருகின்றனர்.

நடனம்

இதற்கிடையே கத்ரீனா கைஃபும் அவரது மாமனார் ஷாம் செளஷல் மற்றும் தாயார் Suzanne Turquotte உடன் நடனமாடும் காணொளி சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது.

இது கத்ரீனா திருமணத்தின் போது எடுக்கப்பட்ட படங்கள் என அவரது ரசிகர்கள் கூறுகின்றனர்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?