samantha Twitter
சினிமா

நாக சைதன்யா குறித்த கேள்விக்கு சமந்தா பதில் : ”கூர்மையான பொருட்களை மறைத்து வைக்கணும் ”

காபி வித் கரண் 7 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை சமந்தா முன்னாள் கணவரான நாக சைதன்யா பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார்.

Priyadharshini R

காஃபி வித் கரண் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமந்தா தன் முன்னாள் கணவரான நாக சைதன்யா பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார்.

பிரபல பாலிவுட் இயக்குநரான கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி தான் காபி வித் கரண். இந்த நிகழ்ச்சியில் பல மொழிகளை சேர்ந்த திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு பல்வேறு அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வார்கள்.

இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. இந்த நிலையில் காபி வித் கரண் 7 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை சமந்தா முன்னாள் கணவரான நாக சைதன்யா பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார்.

Samantha Ruth Prabhu

பிரிவுக்குப் பிறகு நாக சைதன்யாவுடனான உறவு மற்றும் வாழ்க்கை பற்றி சமந்தாவிடம் கரண் ஜோஹர் கேட்டார்.

அதற்குப் பதிலளித்த சமந்தா வாழ்க்கை கடினமாக இருந்தது, ஆனால் தற்போது பரவாயில்லை. முன்பைவிட நான் தைரியமானவளாக இருக்கிறேன் என்றார்.

இதற்கிடையில் நாக சைதன்யா பற்றி கேட்கும் போது கணவர் என்று கரண் குறிப்பிட்டதற்கு மறுப்பு தெரிவித்த சமந்தா முன்னாள் கணவர் என்று கூறி சற்று முகம் சுழித்தார்.

மேலும் நாக சைதன்யாவிடம் இருந்து ரூ.250 கோடி ஜீவனாம்சம் கேட்டதாக வந்த செய்திகளுக்கும் பதிலளித்தார்.

"நான் ரூ.250 கோடி வாங்கினேன் என்று செய்திகள் வெளியானதையடுத்து, தினமும் காலையில் எழுந்தவுடன் வருமான வரித்துறை அதிகாரிகள் வருவார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் வரவில்லை" என்றார்.

samantha

மேலும் சமந்தாவிடம் உங்கள் இருவருக்குமிடையில் கடினமான உணர்வுகள் உள்ளதா? என்று விவாகரத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு சமந்தா, "எங்கள் இருவரையும் ஒரு அறையில் விட்டால், அங்கு கூர்மையான பொருட்கள் எதுவும் இருக்கக்கூடாது" என்றார் சமந்தா.

தற்போது இவருக்கும் இடையே நல்ல சுமுகமான சூழ்நிலை இல்லை எனவும் ஆனால் எதிர்காலத்தில் மாறலாம் என்றார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?