Vijay Beast
சினிமா

Beast : தீவிரவாத காட்சிகளால் பீஸ்ட் படம் வெளியிட தடை - விரிவான தகவல்கள்

Antony Ajay R

நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, யோகி பாபு, ரிடின் கிங்ஸ்லி, செல்வராகவன், விடிவி கனேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை இயக்கிய நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் அனிரூத் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இந்த திரைப்படத்தை வெளியிட குவைத் நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது.

தளபதியின் ஆக்‌ஷன் திரைப்படமான பீஸ்ட் இன்னும் ஒரு வாரத்தில் வெளியாகவிருக்கும் நிலையில் இந்த தடை அறிவிக்கப்பட்டிருக்கிறது. வெளிநாடுகளில் திரைப்படங்கள் வெளியிடப்படும் போது அந்த நாட்டுத் தணிக்கைக்கு உட்படுத்தப்படும். அதில் தடை செய்யப்படும் படங்களை அங்குக் காண முடியாது.

தீவிரவாத காட்சிகள்

கடைசியாக விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் அதிலிருந்த வன்முறை காட்சிகள் காரணமாக குவைத்தில் வெளியிடப்படவில்லை. தீவிரவாத காட்சிகள், அரபு நாடுகளில் தீவிரவாதிகள் இருப்பது போன்ற காட்சிகள், இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகளாகக் காட்டும் காட்சிகள் இடம் பெரும் படங்கள் அரபு நாடுகளில் தடை செய்யப்படும். துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான குருப் திரைப்படமும் அவ்வாறு தடை செய்யப்பட்டது.

தீவிரவாதிகள் மால் ஒன்றைக் கடத்தி வைப்பதாகவும் அந்த மாலில் இருக்கும் RAW அதிகாரியான வீரராகவன் அவர்களை தொம்செய்வதுமாக ட்ரெய்லர் காட்சிகள் அமைந்துள்ளன. குவைத்தில் தடை செய்யப்பட்டது பீஸ்ட் படத்தின் ஓவர் சீஸ் வசூலை கணிசமாகக் குறைக்கும்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?