1955ம் ஆண்டு இந்தியில் திலீப்குமாரின் நடிப்பில் உரன் கடோலா என்ற படம் வெளியானது.
இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த 9 பாடல்களையும் முகமது ரஃபியுடன் இணைந்து லதா மங்கேஷ்கர் பாடியிருந்தார்.
இதேபடம், பின்னர் தமிழில் வான ரதம் என்ற பெயரில் அந்த காலத்திலே டப் செய்யப்பட்டு ரிலீசானது.
அந்த படத்தில் இடம்பெற்ற கம்பதாசன் எழுதிய எந்தன் கண்ணாளன் என்ற பாடலை லதா மங்கேஷ்கர் மீண்டும் தமிழில் பாடினார்.
இந்த இரண்டு படங்களுக்கும் இசையமைப்பாளர் நவ்ஷத் என்பவர் இசையமைத்திருந்தார்.
இசையில் 1987ம் ஆண்டு வெளியான “ஆனந்த்” என்ற படத்தில் 32 ஆண்டுகளுக்கு பிறகு “ஆராரோ ஆராரோ” என்ற பாடலை பாடினார். நேரடி தமிழ் படத்தில் லதா மங்கேஷ்கர் பாடிய முதல் தமிழ் பாடல் இதுவே ஆகும்.
1988ம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணாவின் அறிமுக இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் “சத்யா”. இந்த படத்திற்காக மீண்டும் லதா மங்கேஷ்கரை இளையராஜா தமிழுக்காக அழைத்து வந்தார். மறைந்த கவிஞர் வாலியின் வரிகளில் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துடன் லதா மங்கேஷ்கர் இணைந்து “வளையோசை” என்ற பாடலை பாடியிருந்தார்.
இப்போது வரை இந்த பாடல் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.
கார்த்திக் நடிப்பில் வெளியான “என் ஜீவன் பாடுது” என்ற படத்தில் இளையராஜாவின் இசையில் உருவாகிய “எங்கிருந்தோ அழைக்கும்” என்ற பாடலை பாடகர் மனோவுடன் இணைந்து டூயட்டாகவும், சோலாவாகவும் லதா மங்கேஷ்கர் பாடியிருந்தார்.
அதன் பிறகு அவர் நேரடி தமிழ் படங்களில் பாடவில்லை.