LEO: "நா ரெடி” வெளியானது தளபதி படத்தின் முதல் சிங்கிள்! ட்விட்டர்
சினிமா

LEO: "நா ரெடி” தளபதி குரலில் வெளியானது முதல் சிங்கிள்!

”நா ரெடி” எனத் தலைப்பிடப்பட்டுள்ள இப்பாடலை நடிகர் விஜய் பாடியிருக்கிறார். விண்ட்டேஜ் விஜய் படங்களில் வருவது போல, “இந்த பாடலை பாடியவர் உங்கள் விஜய்” என்றும் அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Keerthanaa R

லியோ திரைப்படத்தின் முதல் பாடலான, “நா ரெடி” நடிகர் விஜய்யின் பிறந்தநாளை ஒட்டி இன்று வெளியாகியிருக்கிறது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படம் லியோ. இந்த திரைப்படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த், அர்ஜுன் மற்றும் மன்சூர் அலிகான் என நடிகர்கள் பட்டாளமே ஒன்றிணைந்திருக்கிறது.

இந்நிலையில், இன்று நடிகர் விஜய் தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி, லியோ படக்குழு, திரைப்படத்தின் First Look போஸ்டரை சரியாக நள்ளிரவு 12 மணிக்கு வெளியிட்டது.

மேலும், இன்று மாலை 6.30 மணிக்கு திரைப்படத்தின் முதல் சிங்கிள் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் சிங்கிளுக்கான புரொமோஷன் வீடியோ கடந்த ஜூன் 20ஆம் தேதி வெளியாகியது குறிப்பிடத்தக்கது.

”நா ரெடி” எனத் தலைப்பிடப்பட்டுள்ள இப்பாடலை நடிகர் விஜய் பாடியிருக்கிறார். விண்ட்டேஜ் விஜய் படங்களில் வருவது போல, “இந்த பாடலை பாடியவர் உங்கள் விஜய்” என்றும் அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

லியோ திரைப்படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் பின்னணி இசையமைத்திருக்கிறார். இந்த பாடலின் வரிகளை விஷ்ணு எடவன் என்பவர் எழுதியுள்ளார்.

பாடலின் ஒரு வரியில், “தேள் கொடுக்கு சிங்கத்த சீண்டாதப்பா” என்று இடம்பெற்றிருப்பதால், இயக்குநர் லோகேஷ் கனகராஜின் எல் சி யூ வில் இத்திரைப்படம் ஒரு அங்கமாக இருக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?