LEO (No Spoilers): LCU என்பது என்ன? விஜய் எப்படி அதில் இடம் பிடிக்கிறார்? Twitter
சினிமா

LEO (No Spoilers): LCU என்பது என்ன? விஜய் எப்படி அதில் இடம் பிடிக்கிறார்?

Antony Ajay R

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் நேற்று வெளியாகியிருக்கிறது. இந்த படத்தில் த்ரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின், மேத்யூ தாமஸ், சாண்டி, சஞ்சய் தத், அர்ஜுன், ஜார்ஜ் மரியன், ஜனனி, மடோனா செபஸ்டின் என பெரிய நடிகர் பட்டாளமே இடம் பெற்றிருக்கிறது.

லியோ படத்துக்கு ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்கள் காணப்படுகின்றன. விஜய் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறார்.

இந்த படம் லோகேஷ் கனகராஜின் LCU அதாவது லோகேஷ் சினிமாடிக் யூனிவர்ஸில் வருமா என்பது ரசிகர்களிடம் இருந்த மிகப் பெரிய கேள்வியாக இருந்தது.

படம் வெளியான பிறகு விஜய்யும் LCUவில் இணைகிறார் என்பது உறுதியானது. LCU என்பது என்ன? விஜய் அதில் எப்படி இடம் பிடிக்கிறார் என்பதைப் பார்க்கலாம்.

சினிமாடிக் யூனிவர்ஸ் என்பது ஒரே உலகத்தில் நடைபெறும் கதைகளைக் குறிக்கும். உதாரணமாக மார்வெல் படங்களைக் கூறலாம்.

அந்த உலகில் சூப்பர் ஹீரோக்களும் அவர்களுக்கு இணையான ஏலியன் வில்லன்களும் இருப்பார்கள். ஒவ்வொரு சூப்பர் ஹீரோவும் தனித்தனியாக படங்களில் தோன்றினாலும் எல்லா கதையும் அதே உலகத்தில் தான் நடக்கும்.

இந்த படங்களில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஹீரோக்கள் ஒரே படத்தில் கிராஸ் செய்யவும் முடியும். தனித்தனியாக கதைகள் எல்லாம் ஒரே முடிவை நோக்கி செல்லும் போது யூனிவர்ஸ் முழுமை பெறும்.

இப்படியாகவே லோகேஷ் கனகராஜின் சினிமாடிக் யூனிவர்ஸில் உள்ள படங்கள் ஒரே உலகில் நடக்கின்றன. கைதி படத்தில் கார்த்தியுடன் சேர்ந்து போதைப் பொருட்களை அழிக்கும் நரேன், விக்ரம் படத்தில் கமல்ஹாசனின் குழுவில் இணைந்து போதை பொருளுக்கு எதிராக போரிடுவார்.

லியோ படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன் போதைப் பொருள் சாம்ராஜ்ஜியத்தை நடத்தி வருகின்றனர்.

இமாச்சல பிரதேசத்தில் வசித்து வரும் விஜய்க்கு பாதுகாப்பாக வருகிறார் ஜார்ஜ் மரியன். இவர் விக்ரம், கைதி இரண்டு படத்திலும் நெப்போலியனாகவே நடித்திருக்கிறார்.

கார்த்தியின் டெல்லி கதாப்பாத்திரத்தின் பெயரும் இதில் சொல்லப்படுகிறது.

விக்ரம் படத்தில் வரும் மற்றொரு கதாப்பாத்திரமும் விஜய்யை சந்தித்து செல்கிறது.

கிளைமேக்ஸில் இன்னொரு LCU Moment-உம் இருக்கிறது. அதன் பிறகும் தொடர்ந்து விஜய் போதைப் பொருளுக்கு எதிரான போராட்டத்தில் இருக்கிறாரா? என்பதைக் கூறவில்லை.

ஒரு வேளை விஜய்யின் கதாப்பாத்திரமும் போதைப்பொருளுக்கு எதிரான போரில் இருக்கிறது என்றால் கைதி 2 அல்லது மற்றொரு LCU படத்தில் நாம் விஜய்யின் கேமியோவை எதிர்பார்க்கலாம். ஆனால் விஜய் கால்ஷீட் கொடுக்க வேண்டுமே!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?