2022 பாலிவுட் திரையுலகுக்கு மிக மோசமானதாக அமைந்தது என்றே கூறலாம்.
கொரோனா பெருந்தொற்று முழுவதும் தணிந்த முதல் ஆண்டு என்பதால் திரையரங்கங்களுக்கு மக்களை அழைத்து வருவது திரைத்துறைக்கு மிக அவசியமானதாக இருந்தது.
ஆனால் பாலிவுட் இதனைச் சரியாக செய்யத் தவறியது.
குறிப்பாக பாலிவுட்டின் நட்சத்திர நடிகர்களது படங்களுக்கு கூட திரையரங்கங்களில் ஈயாடவில்லை.
ரசிகர்களின் மனப்போக்கு முற்றிலுமாக பாலிவுட்டுக்கு எதிரானதாக இருந்ததைப் பார்க்க முடிந்தது.
வெளியான ஒவ்வொரு படமும் #Bycott-ல் சிக்கியது. இன்னும் பல காரணங்களால் இந்த ஆண்டு பாலிவுட்டில் பெரிய ஃப்ளாப் ஆன படங்கள் குறித்துக் காணலாம்.
ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் முதல் வாரத்தில் 20 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது.
135 கோடி பட்ஜெட்டுடன் ஒப்பிடுகையில் இது மோசமான ஒன்றாகும்.
விமர்சன ரீதியாகவும் மிக மோசமான கருத்துகளையே பெற்றது.
ஆமிர்கான் மற்றும் கரீனா கபூர் நடிப்பில் வெளியான லால் சிங்க் சத்தா படத்தை விமர்சன ரீதியாக சிலர் பாராட்டினாலும் செலவழிக்கப்பட்ட 186 கோடியை கூட இந்த படம் திரும்பப் பெறவில்லை என தகவல்கள் கூறுகின்றன.
ஃபாரஸ்ட் கம்ப் திரைப்படத்தின் ரீமேக்கான இது ஒரிஜினல் திரைப்படம் உருவாக்கிய தாக்கத்தை உருவாக்க தவறியது.
ஆயுஷ்மான் குரானாவின் அன் ஆக்ஷன் ஹீரோ திரைப்படமும் தயாரிப்பாளருக்கு மோசமான விளைவையே ஏற்படுத்தியது.
முன்னணி நாயகர்களான சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் அஜய் தேவ்கன் நடித்த இந்த படம் 100 கோடி பட்ஜெடில் 36.15 கோடி தான் ஈட்டியது.
லால் சிங்க் சத்தா மற்றும் ரக்ஷா பந்தன் திரைப்படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகின.
இரண்டு படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் பெரும் தோல்வியைத் தழுவின.
வரலாற்று படமான இது மன்னர் பிரித்விராஜின் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
மதப் பிரச்சாரம் செய்வதற்காகவே எடுக்கப்பட்ட படம் போல இருந்தது, அதைத் தவர வேறெதுவுமே இந்த படம் செய்யவில்லை.
"கோயில்களை அவர்கள் மசூதிகளாக மாற்றினர்" போன்ற திணிக்கப்பட்ட வசனங்கள், இறுதியாக அரசியும் அரண்மனைப் பெண்களும் உடன்கட்டை ஏறும் அபத்தமாக காட்சியும் படத்தின் தோல்விக்கு முக்கிய காரணங்களாக அமைந்தது.
ரன்பீர் கபூர் நடிப்பில் ஜூலை மாதம் வெளியானது இந்த படம். தெலுங்கில் ஆர்ஆர்ஆர் வெற்றியைத் தொடர்ந்து வராலாற்று பின்னணியுடன் எடுக்கப்பட்ட இந்த படம் வரலாற்றுத் தோல்வியாக அமைந்தது.
கங்கனா ரானாவத் என்னதா சில சக்தி வாய்ந்த கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்திருந்தாலும் ஆக்ஷன் ஹீரோயினாக அவதாரமெடுக்க நினைத்தவருக்கு இந்த படம் ஆப்பு வைத்தது என்றே கூறலாம்.
நானி நடிப்பில் தெலுங்கில் ஹிட் ஆன திரைப்படம் ஜெர்சி.
இதனை ஷாஹித் கபூர் இந்தியில் ரீமேக் செய்து பெரும் தோல்வியைத் தழுவினார்.
குடும்ப படமாக எடுக்க நினைத்த இந்த படம் ரசிகர்களை துளியும் கவரவில்லை.
கதைகள் தேர்வு செய்வதில் மட்டும் பாலிவுட் நட்சத்திரங்கள் கோட்டைவிடவில்லை. சரியாக ரீமேக் செய்வதில் கூட பாலிவுட் திரையுலகம் சொதப்பியிருக்கிறது.
தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் வெளியாகி ரசிகர்களால் இன்றளவும் கொண்டாடப்படும் ஜிகர்தண்டா படத்தை பச்சான் பாண்டே என்ற பெயரில் ரீமேக் செய்தார் அக்ஷய் குமார்.
ஆனால் ஜிகர்தண்டா கதையில் செய்யப்பட்ட மாற்றங்கள் ரசிகர்களை ஈர்க்கவில்லை.
Sailesh Kolanu தெலுங்கில் எடுத்து ஹிட்டான ஹிட் திரைப்படம் ஏனே இந்தியில் பெரிய ஃப்ளாப் ஆனது.
நிகம்மா
நானி சாய்பல்லவி நடித்த மிடில் க்ளாஸ் ஆம்பல படத்தின் ரீமேக் இந்தியில் ரசிகர்களை தியேட்டருக்கு அழைத்துவரத் தவறியது.
மலையாளத்தில் ஹெலென் என்ற பெயரில் வெளியாகி ஹிட்டான த்ரில்லர் திரைப்படம் தான் ஜான்வி கபூரின் மிலியாக உருவாகியிருந்தது.
தமிழில் அன்பிற்கினியாளாக கூட விமர்சன ரீதியில் வெற்றி பெற்ற இந்த படம் இந்தியில் பெரும் தோல்வியாக மட்டுமே அமைந்தது.
தமிழ் சினிமாவில் புதிய த்ரில்லர் அத்தியாயத்தை தொடங்கிவைத்த திரைப்படம் ராட்சசன்.
இந்த படத்தின் கதையை பாலிவுட்டுக்கு ஏற்றது போல மாற்றுவதில் படக்குழு சொதப்பியதால் இதுவும் அக்ஷய் குமாருக்கும் பெரும் ப்ளாப் ஆனாது.
டொவினோ தாமஸ் நடித்த இந்த திரைப்படம் மலையாளத்தில் பெரிய ஹிட் ஆனது.
இந்தியில் அதே பெயரில் வெளியானாலும் அதே அளவு ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கத் தவறியது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust