Serial Actress

 

Twitter

சினிமா

இவங்க ஹீரோயின் மெட்டீரியல் பா! - அண்டர் ரேட்டட் சீரியல் நடிகைகள்

ஆதினி

ராதிகா, தேவயானி, நளினி, காயத்ரி ஜெயராமன் உள்ளிட்டோர் வெள்ளித்திரையிலிருந்து சின்னதிரைக்கு வந்து முத்திரை பதித்தவர்கள் எண்ணிக்கை அதிகம். ஆனால் சின்னதிரையில் இருந்து வெள்ளித்திரைக்குச் சென்றவர்கள் எண்ணிக்கை குறைவுதான். அப்படி படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் துணை நடிகை கதாபாத்திரங்கள் தான் கிடைக்கும். செய்தி வாசிப்பாளர் பிரியா பவானி சங்கர், பிக் பாஸ் ரைஸா வில்சன் போன்ற ஒரு சிலருக்குத்தான் சின்னதிரையில் இருந்து நாயகியாக வெள்ளித்திரையில் ஜொலிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. சினிமாவை பொறுத்தவரை பிரெஷ் ஆனால் முகங்களைத் தான் பெரும்பாலான இயக்குநர்கள் தேர்வு செய்கிறார்கள். அப்படியிருக்க சீரியல்களில் நடித்து வரும் நடிகைகள் பலர் அழகிலும், நடிப்பிலும் வெள்ளித்திரை நடிகைகளுக்கே டஃப் ஃபைட் கொடுக்கிறார்கள். அவர்களில் ஒரு சிலரை இங்கே பட்டியலிட்டிருக்கிறேன்…

Chaitra Reddy

``கயல்’’ சைத்ரா ரெட்டி ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் சைத்ரா ரெட்டி. இந்த சீரியலில் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் இவரின் கியூட் ரியாக்‌ஷன்ஸுக்கு ஃபேன்ஸ் அதிகம். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் `கயல்’ தொடரில் நாயகியாக நடித்து வருகிறார். மாடர்ன், ஹோம்லி என எந்த ஸ்டைல் ஆடை அணிந்தாலும் கச்சிதமாக பொருந்தி வருகிறது இவருக்கு. அஜித்தின் வலிமை திரைப்படத்தின் சிறிய கதாபாத்திரத்தில் படம் நெடுக பயணித்திருக்கிறார். தீபிகா படுகோனே போன்ற உயரம், பார்பி டால் முகம்.. சினிமாவில் ஜொலிக்க பத்து பொருத்தமும் உடையவர்!

Ayesha

`சத்யா’ ஆயிஷாஜீ தமிழ் இன்ஸ்டா பக்கத்தில் பகிரப்படும் எல்லா பதிவுக்கும் சத்யா 2 சீரியல் குறித்தும், ஆயிஷா பற்றியும் கமெண்டுகள் வந்துவிடும். ஆயிஷாவை கொண்டாடித் தீர்க்க அவ்வளவு ஃபேன் பக்கங்கள் இருக்கின்றன. ``அவங்க என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா’’ என்று நினைத்து விட வேண்டாம். உண்மையில் அவருக்கு ரசிகர்கள் அதிகம். சத்யா சீரியலில் க்யூட்டான டாம் பாய் ரோலில், கெத்தாக சென்னை தமிழில் பேசி தெறிக்க விடுகிறார். பைக் ஓட்டுவது, சண்டை போடுவது, காமெடி செய்வது சகலமும் இவருக்கு அத்துபடி. ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் குயின் ரியாலிட்டி ஷோவில் ஆயிஷா தான் ஜெயிப்பார் என்று அவரின் ரசிகர்கள் 100% நம்புகின்றனர். சீரியலில் ஆக்‌ஷன், காதல், காமெடி என அசத்தும் ஆயிஷா, இன்ஸ்டாவில் கிளாமர் மோடுக்கு மாறிவிடுவார். சினிமாவில் ஹீரோயின் ஆக அத்தனை அம்சமும் ஆயிஷாவிடம் கொட்டிக் கிடக்கிறது.

Divya Ganesh

பாக்கியலட்சுமி `ஜெனி’. பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனியாக நடிக்கும் திவ்யா கணேஷுக்கு சீரியலின் நாயகியை விடவும் ஃபேன்ஸ் அதிகம். சீரியலில் ஓவர் ஆக்டிங் செய்யாமல் கேஷுவலாக நடிப்பது தான் இவரின் பிளஸ். இன்ஸ்டாவில் இவர் பகிர்ந்த ஸ்விம் சூட் போட்டோ ஷூட் செம வைரல். ஹோம்லியான ஜெனியை ரசித்துவிட்டு, இன்ஸ்டாவில் திவ்யா கணேஷின் இன்ஸ்டா பக்கத்தில் நோட்டமிட்டவர்கள் கண்டிப்பாக வாயை பிறந்திருப்பார்கள். மாடர்ன் உடைகளில் மாஸாக போஸ் கொடுக்கிறார் திவ்யா. சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் ஒரு ரவுண்ட் வந்துவிடுவார்!

மேலும் சில நடிகைகள் பற்றி அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்!

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?