Love Today : Short Film முதல் திரைப்படம் வரை ப்ரதீப் வைத்த கனெக்ஷன் - விஜய் கொடுத்த அனுமதி Twitter
சினிமா

Love Today : Short Film முதல் திரைப்படம் வரை ப்ரதீப் வைத்த கனெக்ஷன்- விஜய் கொடுத்த அனுமதி!

Antony Ajay R

வரும் நவம்பர் 4ம் தேதி வெளியாக இருக்கிறது லவ் டுடே திரைப்படம். இன்றைய காதலைக் கூறும் வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் ரிலீசாகி மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

குறிப்பாக சில நாட்களுக்கு முன்னர் ஒரு நேர்காணலில் விஜய்யின் வாரிசு படத்தை இயக்கி வரும் வம்சி படிப்பள்ளி லவ் டுடே படத்தின் கதைக்களம் வித்தியாசமாக இருப்பதாகவும், திரைப்படத்தைக் காண ஆவலாக உள்ளதாகவும் கூறியிருந்தார்.

ரசிகர்களையும் இந்த ட்ரெய்லர் பரவலாக ஈர்த்துள்ளது. யூடியூபில் 5 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.

லவ் டுடே ட்ரெய்லர்

முன்னதாக இந்த படத்தின் இயக்குநர் ப்ரதீப் ரங்கநாதன் இயக்கிய கோமாளி திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. ஜெயம் ரவி நடித்திருந்த அந்த படத்தை தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்படுவதற்கு முந்தைய நாட்களில் இருந்த நம் வாழ்வியலையும் தற்போதைய வாழ்வியலையும் ஒப்பிட்டு குழந்தைகள் விரும்பும் விதமாக இயக்கியிருப்பார் ப்ரதீப்.

தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க இளம் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருகிறார் ப்ரதீப். எந்த ஒரு இயக்குநரிடமும் அசிஸ்டன்டாக பணியாற்றாமல் கோமாளி படத்தினை இவர் இயக்கினார்.

அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததற்கு முக்கிய காரணம் ஆப் லாக் என்ற அவரது குறும்படம் தான்.

டெல்லி கணேஷ், ப்ரதீப் நடித்துள்ள அந்த குறும்படமானது யூடியூபில் லட்சக்கணக்கானோரால் பார்க்கப்பட்டுள்ளது.

ஒரு அப்பா தனது மகள் காதலிக்கும் நபரின் மொபைலை மகளிடமும் மகளின் மொபைலை அந்த நபரிடமும் மாற்றிக்கொடுத்து காதலுக்கு ஆப்பு வைப்பது தான் ஆப்லாக்.

இதே கதையை அடிப்படையாகக் கொண்டு தான் லவ் டுடே திரைப்படமும் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் குறும்படத்தில் மறைக்கப்பட்ட விஷயங்களை விவரமாக கூறுகிறது இந்த படம்.

இன்றைய காலக் காதலில் ஒருவருக்கு ஒருவர் மறைத்துக்கொள்ளும் விஷயங்களைப் பற்றி பேசுவது இந்த கதையின் கரு. இதனை திரை அனுபவமாக எப்படித்தரப் போகிறார் பிரதீப் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

லவ் டுடே டைடிலுக்காக விஜய்யிடம் இந்த ஷார்ட் ஃபிலிமைக் காட்டி இப்படி தான் படம் இருக்கப் போகிறது எனக் கூறியுள்ளார் ப்ரதீப். விஜய்யும் படம் வித்தியாசமாகவும் சிறப்பாகவும் இருப்பதாக கூறி டைடிலை பயன்படுத்தக் கூறியுள்ளார்.

மேலும் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஏஜிஎஸ். இவர்கள் ஏற்கெனவே பிகில் படத்தை தயாரித்திருந்ததால் விஜய்யை ரீச் செய்ய எளிதாக இருந்ததாக ப்ரதீப் கூறியுள்ள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?