Vijay- Mahesh Babu Twitter
சினிமா

Ponniyin Selvan: வந்தியத்தேவனாக விஜய்? இயக்குநர் சாய்ஸ் இவர்கள் தான்- ஜெயமோகன் கூறியதென்ன?

Keerthanaa R

எழுத்தாளர் கல்கியின் பொன்னியின் செல்வன் கதை படமாக்கப்பட்டு, வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி முதல் பாகம் வெளியாகவுள்ளது. இதன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் கோலாகலமாக நடைபெற்றது. நடிகர்கள் ரஜினி-கமல் முன்னிலையில் டிரெய்லர் வெளியிடப்பட்டது. மேலும், 5 மொழிகளிலும் 5 நட்சத்திரங்களின் குரல்களில் டிரெய்லர் வெளியானது.

கிட்ட தட்ட இரண்டு வருடங்களுக்கு மேலாக தயாராகி வரும் இத்திரைப்படத்தின் மீது அனைவருக்கும் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது. முக்கியமாக புத்தகம் வாசித்திருந்தவர்கள், எந்த கதாபாத்திரத்தில் யார் நடிக்கப்போகிறார் என அறிந்துகொள்வதில் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் பட்டியலில் அடக்கம். இவர்களைத் தவிர மூத்த நடிகர்கள் பிரகாஷ் ராஜ், பிரபு, லால், ஜெயராம், சரத்குமார், பார்த்திபன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்

இந்நிலையில், படத்தின் வசனகர்த்தா எழுத்தாளர் ஜெயமோகன் கூறியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, இயக்குநர் மணிரத்னம் முதலில் இரண்டு முக்கிய கதாபாத்திரங்களுக்குத் தேர்வு செய்த நடிகர்கள் தளபதி விஜய், தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுவும் தானாம்.

சரி இவர்களை எந்த ரோலுக்காக இயக்குநர் தேர்வு செய்தார்?

"பொன்னியின் செல்வன் படத்தின் ஆரம்ப கட்டத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய்யும், அருண்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் நடிகர் மகேஷ்பாபுவையும் நடிக்கவைக்க வேண்டும் என்பது இயக்குநர் மணிரத்னத்தின் தேர்வாக இருந்தது" என எழுத்தாளர் ஜெயமோகன் தெரிவித்திருக்கிறார். ஆனால் என்ன காரணங்களுக்காக இவர்கள் இப்பாத்திரங்களில் நடிக்கவில்லை என்பது தெரியாது.

எனினும், படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், இந்த செய்தி கொஞ்சம் அதிர்ச்சி கலந்த எதிர்பார்ப்பை கிளரவிட்டுள்ளது. திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

விஜய் மற்றும் மகேஷ் பாபு நடிக்கவிருந்த கதாபாத்திரங்களில் முறையே, கார்த்தி மற்றும் ஜெயம் ரவி நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?