டாப்ஸி Twitter
சினிமா

"என் பாலியல் வாழ்க்கை அவ்வளவு சுவாரஸ்யமானது அல்ல" - நடிகை டாப்ஸி கூறியது ஏன்?

சமீபத்தில் பல சர்ச்சைகளை உருவாக்கிய நிகழ்ச்சி தான் "காஃபி வித் கரண்". இந்த நிகழ்ச்சி ஏற்கெனவே பிறரின் பாலியல் வாழ்க்கை குறித்து அதிகம் பேசப்படுவதாக நெட்டிசன்களால் குறைசொல்லப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Antony Ajay R

நடிகை டாப்ஸி மிகவும் துணிச்சலான கதாப்பாத்திரங்களை ஏற்று நடிக்கக் கூடியவர். பெண் மைய கதாப்பாத்திரங்களை அதிகம் தேர்வு செய்பவர் என்றாலும் கமர்ஷியல் ஹீரோயினாகவும் முன்னணியில் இருக்கிறார்.

டாப்ஸி தற்போது வட இந்திய படங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். அவர் நடிப்பில் அனுராக் கஷ்யப் இயக்கிய தபாரா திரைப்படம் வரும் 19ம் தேதி வெளியாக இருக்கிறது.

தபாரா படத்தின் புரமோஷன் ஒன்றில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வது குறித்து தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, "என்னுடைய பாலியல் வாழ்க்கை அவ்வளவு சுராஸ்யமானது அல்ல" என பதிலளித்திருக்கிறார் டாப்ஸி.

சமீபத்தில் பல சர்ச்சைகளை உருவாக்கிய நிகழ்ச்சி தான் "காஃபி வித் கரண்". இந்த நிகழ்ச்சி ஏற்கெனவே பிறரின் பாலியல் வாழ்க்கை குறித்து அதிகம் பேசப்படுவதாக நெட்டிசன்களால் குறைசொல்லப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கரண் ஜோகர் என்ற பாலிவுட் இயக்குநர் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் அதிகமாக பாலிவுட் நடிகர், நடிகைகள் கலந்துகொள்ளும் இந்த நிகழ்ச்சியில் சமந்தா, விஜய் தேவரகொண்டா என தென்னிந்திய நட்சத்திரங்களும் கலந்து கொண்டிருக்கின்றனர்.

கரண் ஏற்கெனவே கரீன கபூரிடம் குழந்தை பிறந்த பிறகான தாம்பத்தியம் பற்றியும், விஜய் தேவரகொண்டாவிடம் மூன்று பேர் பாலுறவு பற்றியும் கேள்விகள் கேட்டது நெட்டிசன்களை கொதிப்படையச் செய்தது.

இவரது நிகழ்ச்சி முழுக்க முழுக்க பாலுறவு குறித்தே இருக்கிறது என்றும் குறை கூறப்படுவதுண்டு.

இந்த காஃபி வித் கரண் நிகழ்ச்சிக்கு அழைக்கப்படாதது குறித்து நடிகை டாப்ஸியிடம் கேள்வி எழுப்பிய போது டாப்ஸி அந்த பதிலைக் கூறினார்.

டாப்ஸி தற்போது நடித்துள்ள தபோரா திரைப்படம் ஒரு டைம் ட்ராவல் கதை. இதில் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார் டாப்ஸி!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?