Nandhini 

 

Newssense

சினிமா

சின்னத்திரையில் நந்தினி மைனா தான் டாப்! 

பெரும்பாலான பிரபலங்களின் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் வருவாய் ஈட்டும் நோக்கில் தான் செயல்பட்டு வருகிறது

ஆதினி

இன்ஸ்டாகிராமில் வெள்ளித்திரை நடிகர்களுக்கு இணையாக சின்னத்திரை பிரபலங்களுக்கும் ரசிகர்கள் வட்டாரம் இருக்கிறது. வித்தியாசம் என்னவென்றால்  வெள்ளித்திரை நடிகைகள், பெரிய பெரிய பிராண்டுகளுடன் கொலாப்ரேஷன் செய்து அவர்களின் பொருட்களை விளம்பரப் படுத்துவார்கள். சின்னத்திரை பிரபலங்கள் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் பொருட்களை விளம்பரம் செய்வார்கள். பெரும்பாலான பிரபலங்களின் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் வருவாய் ஈட்டும் நோக்கில் தான் செயல்பட்டு வருகிறது.

Nandhini

ஃபீல்ட் அவுட் ஆகிவிட்டாலும், இன்ஸ்டாவில் போட்டோஷூட் செய்தே பிரபலமானவர்களின் பட்டியல் நீள்கிறது. அந்த வரிசையில் மற்ற பொழுதுபோக்கு சேனல்களை விட விஜய் டிவி பிரபலங்களுக்கு இன்ஸ்டாகிராமில் ஃபாலோயர்ஸ் அதிகம். இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோயர்ஸ் வைத்திருப்பதால், யூடியூப் சேனல்களிலும் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகம். இதனால் தான் அர்ச்சனா, பிரியங்கா, மா.கா.பா ஆனந்த், புகழ், சிவாங்கி, மைனா உள்ளிட்டோர் எந்த வீடியோ பதிவிட்டாலும் டிரெண்டிங்கில் வந்துவிடுகிறது. சில பெண் சின்னத்திரை பிரபலங்களின் இன்ஸ்டா ஃபாலோயர்ஸ் எண்ணிக்கை இதோ..

Sujitha

``பாண்டியன் ஸ்டோர்ஸ்’’ சுஜிதா

குழந்தை நட்சத்திரமாக தமிழ் வெள்ளித்திரையில் அறிமுகமான சுஜிதா, திரை குடும்ப பின்னணி உடையவர் என்பதால் மிகவும் பரிட்சையமானவர். அவரின் யூ டியூப் சேனல் பெயர் ``கதை கேளு கதை கேளு’’/ 522k பேர் பின் தொடர்கின்றனர். இன்ஸ்டாவில் இவரை 1 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள்.

Priyanka

``பிக் பாஸ்’’ பிரியங்கா

தொகுப்பாளினி பிரியங்காவுக்கு ஃபேன் பேஸ் அதிகம். அவரின் யூ டியூப் சேனலில் எந்த வீடியோ பதிவிட்டாலும் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்து விடும். யூடியூபில் அவரை 1.4 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள். இன்ஸ்டாவில் 2.6 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள். ``குக் வித் கோமாளி’’ சிவாங்கி 

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான சிவாங்கி க்கு இன்ஸ்டாகிராமில் 4.5 மில்லியன் ஃபாலோவர்ஸ். யூ டியூபில் 1.7 மில்லியன் ஃபாலோவர்ஸ்.

Manimegalai & Hussain

``குக் வித் கோமாளி’’ மணிமேகலை

இன்ஸ்டாவில், மணிமேகலை ஹுசைன் தம்பதிக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அவர்களின் வீடியோக்கள் அனைத்தும் மில்லியன் வியூ தொட்டுவிடுகிறது. மணிமேகலைக்கு இன்ஸ்டாகிராமில் 3 மில்லியன் ஃபாலோவர்ஸ். யூ டியூபில் 1.47 மில்லியன் ஃபாலோவர்ஸ்.

Alya Manasa

ராஜா ராணி ஆல்யா மானசா

ஆல்யா மானசா-சஞ்சீவ் யூ டியூப் சேனலில் 952k சப்ஸ்கிரைபர்ஸ், ஆல்யா இன்ஸ்டாவில் 4 மில்லியன் ஃபாலோவர்ஸ் இருக்கின்றனர்.

இவர்கள் அனைவரை விடவும் முன்னணியில் இருப்பவர்  மைனா நந்தினி. சின்னத்திரை வெள்ளித்திரை என ஆல் ரவுண்டராக கலக்கி வருகிறார் நந்தினி. யோகேஷ்-நந்தினி-யின் யூ டியூப் சேனலில் காமெடியான வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். நந்தினியை இன்ஸ்டாவில் 6 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள். சின்னத்திரை பிரபலங்கள் 6 மில்லியனுக்கு மேல் ஃபாலோயர்ஸ் இருப்பது நந்தினிக்கு மட்டும் தான். தற்போது விஜய் டிவியில் முக்கிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். அதிகமாக யூடியூப் சேனலில் கவனம் செலுத்தி வருகிறார்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?