மனித வாழ்வின் நெருக்கடியில் சிக்கி நைந்து விழிபிதுங்கி இருக்கும் அழகியலை அரவணைத்து கவிதையாக்கி தந்தவர் நா.முத்துகுமார். இந்த நூற்றாண்டின் தொடக்கத்தை தமிழர்களுக்கு அழகாக்கிக் கொடுத்தவர் என்றால் மிகையாகாது. திரையிசை வரிகள் புரியத் தேவையில்லாத ஒன்றாக மாறிக்கொண்டிருந்த காலத்திலும் இவரது வரிகளுக்காக காதுகள் காத்துக்கொண்டிருந்தன.
வலிகளில் இருந்து வாழ்க்கைப் பாடங்களை கற்றுக்கொள்ளும் பக்குவம் அவ்வளவு எளிதில் வாய்க்காது. ஆனால் கவிதைகளின் வழி அதனை விளங்க வைத்த காஞ்சிபுரத்துக் காரருக்கு நாம் எப்போதும் கடன்பட்டிருக்கிறோம்.
இன்றும் திரையுலகம் ஆச்சரியப்படும் அளவு நா.முத்துக்குமாரை கொண்டாடுகிறது தமிழ் சமுகம். இந்த கொண்டாட்டங்கள் இன்னும் ஒரு நூற்றண்டுக்கேனும் ஓயாதிருக்கும். தமிழிருக்கும் வரை தலைசிறந்தவையாக இருக்கும் நா.முவின் எழுத்தில் சில பாடல்கள்...
சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும் மலையின் அழகோ தாங்கவில்லை
வளர்ந்ததுமே யாவரும் தீவாய் போகிறோம்
தந்தை அவனின் பாசத்தை எங்கே காண்கிறோம்?
நமக்கெனவே வந்த நண்பன் தந்தை
கவலை யாவும் மறந்தால் இந்த வாழ்க்கை முழுதும் அழகு
உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும் விரல்கள் இன்று எங்கே தோளில் சாய்ந்து கதைகள் பேச முகமும் இல்லை இங்கே
முதல் கனவு முடிந்திடும் முன்னமே தூக்கம் கலைந்ததே
கதை பேசிக் கொண்டே வா காற்றோடு போவோம் உரையாடல் தீர்ந்தாலும் உன் மௌனங்கள் போதும்
இந்த புல் பூண்டும் பறவையாவும் போதாதா இனி பூலோகம் முழுதும் அழகாய் போகாதா
வெண்ணிலவை வேட்டையாடி வீட்டில் அடைச்சோம்
கண் மூடி ஒரு ஓரம் நான் சாய்கிறேன்
கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கிறேன்
கல்லறையில் கூட ஜன்னல் ஒன்று வைத்து உந்தன் முகம் பார்ப்பேனடி
கண்ணாடி என்றும் உடைந்தாலும் கூட
பிம்பங்கள் காட்டும் பார்க்கின்றேன்.
புயல்போன பின்னும் புதுபூக்கள் பூக்கும்
இளவேனில் வரை நான் இருக்கின்றேன்.
முகமூடி அணிகின்ற உலகிது, உன் முகமென்று
ஒன்றிங்கு என்னது? நதி நீரிலே அட விழுந்தாலுமே
அந்த நிலவொன்றும் நனையாதே வா நண்பா
காட்டினிலே வாழ்கின்றோம் முட்களின் வலி ஒன்றும் மரணம் இல்லை
நா.முத்துகுமார் எனும் கடலில் மிகச் சில துளிகள் தான் இந்த பாடல்கள். நம்பிக்கையை இதயத்துக்கு நேரடியாக ஊட்டிவிடும் அவரது கைகளின் ரேகையில் ஒரு வரி தான் இந்த படல்கள். ப்ளே லிஸ்ட்கள், புத்தகங்களில் அடக்கமுடியாத அவரது வரிகள் வாழ்வில் நண்பனைப் போல எப்போதும் நம் நிழலின் கைப்பிடித்து நடந்து வருகின்றன.
மரண நேரத்தில்
உன் மடியின் ஓரத்தில்
இடமும் கிடைத்தால்
இறந்தும் வாழுவேன்
உண்மையில் நம் இயர்போன்களில் இறந்தும் வாழும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்❤
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust