Naane Varuven டிவிட்டர்
சினிமா

Naane Varuven: வெளியானது செல்வா-தனுஷ் படத்தின் டீசர்!

Keerthanaa R

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படம் நானே வருவேன். கிட்ட தட்ட 11 ஆண்டுகளுக்கு பிறகு இணைகிறது இந்தக் கூட்டணி. நானே வருவேன் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். 

வயதானவர், இளைஞர் என இரட்டை வேடத்தில் நடிக்கிறார் தனுஷ். இந்த படத்தில் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த Elli AvrRam நாயகியாக நடிக்கிறார். 

வரும் செப்டம்பர் 29 அன்று திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இரு தினங்களுக்கு முன் படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு துவங்கியது.  இந்நிலையில், இன்று மாலை 6.40 மணிக்கு பத்தின் டீசர் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இரட்டை வேடத்தில் நடிக்கும் தனுஷ், ஹீரோவாகவும், வில்லனாகவும் இப்படத்தில் நடிக்கிறார். deja vu வின் விளைவால் பார்க்க ஒரே மாதிரி இருக்கும் இருவரின் வாழ்வில் நடக்கும் விஷயங்கள், அதனால் ஏற்படும் பிரச்னைகள், மாற்றங்கள் தான் கதைக்களம் என்ற கணிப்பு பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதனால் 'D vs D' என்ற வாக்கியமும் டிரெண்டாகி வருகிறது

இதற்கேற்றாற்போல இரு வெவ்வேறு சாயலில் கதாபாத்திரங்கள் டீசர் அறிவிப்பு போஸ்டரில் இருந்தது ரசிகர்கள் மத்தியில் இன்னும் அதிக ஆவலை தூண்டியுள்ளது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?