Samantha- Naga Chaitanya Twitter
சினிமா

"நான் முற்றிலும் மாறியுள்ளேன்" - சமந்தாவுடனான விவாகரத்து குறித்து மனம் திறந்த நாக சைதன்யா

முன்பைவிட அதிகமாக குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் ஒன்றியுள்ளதாகக் கூறினார் சைதன்யா. " என்னை நானே இப்போது ஒரு புதிய மனிதனாக பார்ப்பது நன்றாக இருக்கிறது" என்றும் தெரிவித்தார்.

Keerthanaa R

நடிகை சமந்தா, நாக சைதன்யாவுடன் விவாகரத்து பெற்ற பிறகு தனது வாழ்க்கை குறித்து கூறியிருந்த நிலையில், சைதன்யாவும் மனம் திறந்துள்ளார். தற்போது தான் நிறைய மாறிவிட்டதாகவும், தன்னை ஒரு புது மனிதனாக பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்

நடிகர் நாக சைதன்யா - நடிகை சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். நான்கு வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு, 2021ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிவை அறிவித்தனர். இது ரசிகர்கள் மத்தியில் பெறும் அதிர்வலையை ஏற்படுத்தியது. காரணம், இவர்கள் இருவரும் தமிழ் - தெலுங்கு என இருமொழி ரசிகர்களாலும் பெரிதும் விரும்பப்பட்ட ஜோடி.

நேற்று ஒளிபரப்பான காபி வித் கரண் 7 நிகழ்ச்சியில் சமந்தா மற்றும் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் சமந்தா - சைதன்யாவின் விவாகரத்து, மற்றும் அவர்கள் இருவருக்குள் தற்போது உள்ள உணர்வுகள் குறித்து கேட்டதற்கு சமந்தா, "எங்கள் இருவரையும் ஒரே அறையில் விட்டால், கூர்மையான பொருட்கள் அந்த அறையில் இருக்கக்கூடாது" என்று சொல்லியிருந்தார். இது இணையத்தில் வைரலாக பரவியது.

எனினும், கடினமாக இருந்தாலும், தற்போது தான் நன்றாக இருப்பதாகவும், இன்னும் வலுவோடு இருப்பதாகவும் சமந்தா கூறியிருந்தார்.

சமந்தாவின் கூற்று இணையத்தைக் கலக்கிய நிலையில், அவரது முன்னாள் கணவர் நாக சைதன்யாவிடம் விவாகரத்து குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த நாக சைதன்யா தான் ஒரு மனிதனாக நிறைய மாறிவிட்டதாகவும், தற்போது பல விஷயங்கள் குறித்து மனம் திறக்க ஆரம்பித்துள்ளதாகவும் கூறியிருந்தார்.

மேலும், முன்பைவிட அதிகமாக குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் ஒன்றியுள்ளதாகக் கூறினார் சைதன்யா. " என்னை நானே இப்போது ஒரு புதிய மனிதனாக பார்ப்பது நன்றாக இருக்கிறது" என்றும் தெரிவித்தார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?